திருப்பாவைப் பிரியனின் தீபாவளி ’ஆறு வித்தியாசம்’ படம் போல இருக்கும் முதல் படத்தில் சட்டென்று உங்கள் கண்களுக்கு ஒரு வித்தியாசம் புலப்பட்டால் தொடர்ந்து படிக்கலாம். சமீபத்தில் அடியேன் யாத்திரை சென்று வந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். ஒரு வாரத்துக்கு முன் "பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி" என்று ஆண்டாள் கூறுவது போல் நிஜமாகவே பனி சொட்ட பீகார் மாநிலத்தில் ‘சீதாமர்ஹி’ என்ற இடத்துக்குச் சென்றேன். அயோத்தியா ராம ஜென்ம பூமி என்றால் ‘சீதாமர்ஹி’ சீதை ஜென்ம பூமி! ஆம் சிதை அவதார ஸ்தலம். இவ்வளவு ராம பக்தர்கள் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என்று இளைஞர்களும், சின்ன பசங்களும் பைக்கில் பல இடங்களில் அலைந்து திரிந்து பால் வாங்கி க்யூவில் நின்ற எங்கள் எல்லோருக்கும் ‘சாய்’ கொடுத்து உபசரித்தார்கள். எங்கள் ஊர் பெருமாளை சேவிக்க இவ்வளவு கூட்டமா என்று பூரிப்பில் இருந்ததை கண்கூட பார்க்க முடிந்தது. ஒருவர் என்னிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க ‘அயோத்தியா’ என்றேன். அதற்கு அவர் ராம ஜென்மப் பூமியிலிருந்து சீதையின் ஜென்மப் பூமிக்கு வந...