பெங்களூருவில் தியாகராஜர் என்னுடைய சின்ன வயதில் பலருடைய உபன்யாசங்களுக்கு என் தகப்பனார் அழைத்துச் செல்வார். அருமையான தமிழில் புகுந்து விளையாடுவார்கள். ”இராமன் என்ன செய்தான் தெரியுமா ?” என்று பட்டிமன்றத்தில் பேசுவது போலவே இருக்கும். ராமாயணம், மஹாபாரதம் கதைகள் தெரிந்தது ஆனால் பக்தி வளரவில்லை. ஒரு முறை ஐஸ் அவுஸ் பக்கம் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்களுடைய உபன்யாசத்துக்கு என் அப்பாவுடன் சென்றிருந்தேன். பக்த மீரா, சூர்தாஸ் பற்றிய அவர் உபன்யாசத்தின் போது கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது. இதே இரண்டு சொட்டு கண்ணீர் என் பையனுக்கு வரவேண்டும் என்று அவனுடன் நேற்று ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் இசை நாடகத்துக்கு என் பையனுடன் சென்றிருந்தேன். நாடகத்தில் ஒரு காட்சி. இரவோடு இரவாகத் தியாகராஜ ஸ்வாமிகள் நித்தியம் ஆராதனை செய்யும் ஸ்ரீராம விக்ரகத்தை அவர் மூத்த அண்ணன் காவிரியில் போட்டுவிட, மறுநாள் காலை தியாகராஜ ஸ்வாமிகள் விக்ரகத்தைக் காணாமல் துடிதுடிக்க அந்தக் காட்சி முடிந்த பின் மேடையில் லைட் மெதுவாக fadeout ஆகி முழுவதும் இருட்டாக... அரங்கில் நிசப்தம். அந்தச் சமயம்.. அர...