இந்தியா டூடே தமிழில் அம்பலம் சிறப்பு பக்கத்தில் சுஜாதா அவர்களின் கேள்விபதில்களும், சின்ன சின்ன கதைகள், கட்டுரைகள் வந்த சமயம். என் எழுத்து ஆர்வம் காரணமாக நான் பெண் பார்த்துவிட்டு வந்த அனுபவத்தை சிறு கட்டுரையாக எழுதினேன். அதை தைரியமாக சுஜாதா அவர்களிடம் காண்பித்தேன். இதை ஒரு பிரிண்டவுட் எடுத்து கொடு என்றார். கொடுத்தேன். அதன் மீது, ”Next Ambalam issue" என்று எழுதி கையெழுத்து போட்டு அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். இந்தியா டூடேயில் வந்தது. அடுத்த முறை அவரை பார்க்கும் போது “சார் இந்த இஷ்யூவில வந்தது” என்றேன். அதற்கு அவர் கேட்ட முதல் கேள்வி “பணம் வந்ததா ?... உங்க அட்ரஸ் கொடுத்துவிடுங்க இவர்களிடம்..பணத்தை ஒழுங்கா அனுப்பிடுங்க..” என்றார். பணம் பெரிது இல்லை ஆனால் எழுத்துக்கு அவர் கொடுத்த மரியாதை இது. இந்த கட்டுரையை படிக்கும் போது சில்லரைத்தனமாக இருக்கிறதே என்று இன்று நினைக்கிறேன். ஆனால் அவர் தந்த ஊக்கம் தான் இன்று என்னையும் பலரையும் எழுத வைத்திருக்கிறது. நான் எழுதிய கட்டுரை கீழே...