"ராம் நிச்சயம் நீ போய் தான் ஆக வேண்டுமா ?” என்றாள் சிந்து ”நிச்சயமாக. ராசியுடன்... இதில் என்ன சந்தேகம்.. ?” “ராசியுமா ?” “ஆமாம்.!“ “அது குழந்தை.. இந்த மாசிக்கு தான் பதினைந்து வயசு முடிகிறது... அதை எதற்கு ?” “தமிழருடைய வீர விளையாட்டை அது எப்போழுது தெரிந்துகொள்ளும் ?.. “ “இதில் என்ன வீரம் இருக்கிறது...? இந்த நூற்றாண்டில் பலருக்கு தமிழே தெரிவதில்லை” ராம் கைகடிகாரத்தை பார்த்த போது ரத்த அழுத்தம் 140 என்று காட்டியது. “நான் போகப் போகிறேன்! இதற்கு மேல் இந்த டாப்பிக் வேண்டாம்!” என்றான் தீர்மானமாக