ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தன்னுடைய படைப்பு சிறுபத்திரிகையில் தொடங்கி, வெகுஜன பத்திரிகையில் வர வேண்டும் என்ற ஆவல் இருக்கதான் செய்கிறது. பிறகு அந்த ஆசை தனி புத்தகமாகவும் பிறகு சினிமா என்று அது தொடர்கிறது. "என்னுடைய கதை விகடனில் வந்திருக்கு படித்தீர்களா ?" என்று நண்பர்கள் குதூகலத்துடன் தொலைபேசியில் சொல்லும்போது அவர்களுடைய சந்தோஷத்தை உணரமுடிகிறது. இணையம், ஈ-மெயில், டிவிட்டர் என்று பல வந்தாலும் புத்தகத்தில் நம் எழுத்தைப் பார்க்கும் ஆனந்தமே அலாதி தான். போன மாதம் ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியது ஒரு பெண். "சார் நீங்க தான் சுஜாதா தேசிகனா ?" "ஆமாம்" "உங்க பெருங்காயம் கதை குங்குமத்தில் படித்தேன்...உங்களுக்கு சொந்த ஊர் தேரெழுந்தூரா?" "இல்லை.. திருச்சி" "ஊரைப் பற்றி அப்படியே எழுதியிருக்கீங்களே... எங்களுக்கு அந்த ஊர் தான் இப்ப சென்னையில் இருக்கோம்... கதை ரொம்ப அருமை... எங்க கதை மாதிரியே இருந்தது" "கதை வந்து மூன்று மாசத்துக்கு மேலே ஆச்சே இப்ப தான் படிச்சீங்களா ?" "ஆமாங்க.. நாங்க தமிழ் பத்திரிகை எல்லாம் வாங்குவதில்ல...