நண்பர் நாணா எனக்கு அனுப்பிய கடிதம். அன்பு நண்பருக்கு.... திருமயம் பக்கத்தில் இராங்கியம் எனும் சிறுகிராமத்தில், என்னுடைய பள்ளி நாட்களில் - தினமணிக்கதிரில் வெளிவந்த 'சொர்க்கத் தீவு' தொடர்கதை மூலம் 'சுஜாதா' என்ற பெயருடன் ஒரு 'அமானுஷ்ய' ஈர்ப்பு ஆரம்பமானது. அது டெவலப் ஆகி..கல்லூரி நாட்களில் விகடனின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' சமயத்தில் அவருடைய தாக்கம் கொஞ்சம் ஓவராகி..லெண்டிங் லைப்ரரியை ஆரம்பிச்சு...( அப்புறம் அதை நடத்தமுடியாமல் நொந்ந்ந்து நூலானது - ஒரு கிளைக் கதை) பிறகு, அந்த சலவைக்காரி, கணேஷ்-வசந்த்..போன்ற வார்த்தைகளால் எல்லாருக்கும் என்ன பாதிப்பு வந்ததோ..அதே மாதிரி பாதிப்புடன்...அவருடன் கதைகளில் இணைந்து மிரட்டிய ஜெயராஜின் 'லோ ஹிப்'களில் மனதைப் பறிகொடுத்து..அப்படியே ஆர்ட்டடிஸ்ட் ஆனவன்..நான்.. மேற்படி அனுபவங்கள் கொண்ட எனக்கு அவரது நேரடி அருகாமை கிடைத்தது ஒரு அற்புதம். அவரது ஓலைப் பட்டாசு, நைலான் கயிறு.போன்ற புத்தகங்களின் மறுபதிப்புகளுக்கு அட்டை வடிவமைப்பு பற்றிய - என் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரிடம் பாராட்டையும் பெற்றுத் தொடர்ந்த...