நடைப் பயிற்சி செய்யும் போது பார்க்கும் வைரங்களில் ஒன்று தான் நீங்கள் மேலே பார்ப்பது. ஆறரை மணிக்கு மூங்கில் இலை நுனியில் ஒரு சொட்டு பனி நீர் தான் இந்த வைரம். சொல்லிவைத்தது போல் எல்லா இலை நுனியிலும் ஒரு சொட்டு இருக்கும். ஏழு மணிக்கு சூரியக் கதிர்கள் அதன் மீது படும் போது எல்லா சொட்டும் ஜொலிக்கும். இந்த காட்சியை பார்த்தால் மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே இந்த பழைய பாடல் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். எல்லா காலத்திலும் ரசிக்கும் தன்மை இருந்திருக்கிறது. அந்த காலத்தில் கேமராவுக்கு பதில் கவிதை. மூங்கில் பற்றி வரும் பாடல்களில் பெரும்பாலும் புல்லாங்குழல் வந்துவிடும். புல்லாங்குழலுடன் கிருஷ்ணரும் கூடவே வந்துவிடுவார். அதனால் மூங்கில் அழகை யாரும் அவ்வளவாக கண்டுகொண்டதில்லை. ஆழ்வார் பாடல்கள், வடக்கே சூர்தாஸ், மீரா போன்ற பக்த்தர்கள் எல்லோரும் கண்ணதாசன் மாதிரி "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" என்று தான் பாடியிருக்கிறார்கள். எம்.எஸ். பாடிய "Kunjani Kunjani Bajati Murli" என்று தேஷ் ராகத்தில் அமைந்த சூர்தாஸ் பஜனை வாழ்கையில் ஒரு முறையாவது கேட்டுவ...