சில வருடங்களுக்கு முன் என் சின்ன மாமியார் பொண்ணு 'லாலு' ஒரு வித்தியாசமான கதையை எழுதியிருந்தாள் . அவளுக்கு எழுதும் ஆர்வம் இருக்கு என்று சில வருஷங்களுக்கு முன் கண்டுபிடித்தேன். கார்ட்டூன் படமும் போடுவாள்.
சென்னைக்கு செல்லும் போது, அவளுடன் வயது வித்தியாசம் இல்லாமல் நகைச்சுவையாக பல விஷயங்கள் பேசுவது ஒரு இனிய அனுபவம்.
நேற்று லாலுவுடன் பேசிக்கொண்டிருந்த போது "சின்ன தேங்க்ஸ் கூட சொல்லாமல், என் கதையை சின்ன குறும்படமாக எடுத்திருக்கிறார்கள்" என்று அதிர்ச்சியாக சொன்னாள். லாலுவிற்கு பாராட்டுக்கள் !
போன வருஷம் இந்த கதையை நான் தமிழில் 'ரீமேக்' செய்ய உன் பர்மிஷன் வேண்டும் என்றவுடன், உங்களுக்கு இல்லாத பர்மிஷனா அத்திம்பேர் என்றாள். நானும் அதை தமிழில் ரீமேக் செய்து சில மாதங்களுக்கு முன் வார பத்திரிக்கைகளுக்கும், சில இணைய தளங்களுக்கும் அனுப்பினேன், அனுப்பியவுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள். பல மாதமாக சும்மா இருந்த கதையை லாலுவிற்கு நன்றியுடன் இங்கே பதிவிடுகிறேன்.
படிப்பவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், இது நகைச்சுவை கதை.
லக்ஷ்மி கல்யாண வைபோகமே, ராதா கல்யாண வைபோகமே
ஐயங்கார் ஆத்துப் பையனோ பெண்ணோ வார இறுதியில், வேளை கெட்ட வேளையில், அமெரிக்காவிலிருந்து போனில்,
“அப்பா சௌக்கியமா?" என்று கேட்டதும், “அங்கே இப்ப என்ன டைம்?” என்று அப்பாவும் வழக்கமான கேள்வி கேட்டுவிட்டு, குடும்ப விஷயங்களைப் பேசிக் கொள்ளும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குச் சென்று, “என் பையன் சின்சின்னாட்டில இருக்கான்” என்று சொல்லிப் பாருங்கள். “என் பையன் சான் ஹோசே” என்று பதில் வரும்.
இப்ப அந்த குடும்பம் உங்க கண்முன்னே ஒரு பிம்பம் மாதிரி தெரிந்திருக்கணுமே ?
'அட, நம்ம மைலாப்பூர் ‘பாச்சா’ குடும்பம் மாதிரியே இருக்கே,' என்று நினைப்பவர்கள் வலது பக்கம் படிக்க ஆரம்பியுங்கள். 'இல்ல, இல்ல. இது நம்ம திருவல்லிக்கேணி 'நச்சு' குடும்பம் தான்' என்று நினைப்பவர்கள் இடது பக்கம் படிக்க ஆரம்பியுங்கள்.
போன வாரம் 'தேங்க்ஸ் கிவிங்,கிற்கு முதல் நாள் கிட்டத்தட்ட ஒரே நேரத்துக்கு நரசிம்மன், பாச்சா குடும்பங்களுக்கு மேலே சொன்ன “இப்ப என்ன டைம்?” போன்கால் வந்தது.
'நச்சு' நரசிம்மன் குடும்பம், திருவல்லிக்கேணி | ' பாச்சா' பார்த்தசாரதி குடும்பம், மைலாப்பூர் |
“ஹலோ” பாட்டி “யாருடா ஃபோன்ல?” என்று கேட்க | ”ஹலோ” ”“ஏன்ணா,, என்னவாம்" |
திருவல்லிக்கேணியில் நரசிம்மனும், மைலாப்பூரில் பாச்சாவும் சாப்பிட்டபின் அந்த பிரசித்தி பெற்ற போன் உரையாடல் இப்படி நடந்தது:
"சார் நான் திருவல்லிக்கேணியிலிருந்து நரசிம்மன் பேசறேன். லட்சுமியோட தோப்பனார்"
"அடடே... நானே ராகுகாலம் முடிஞ்சாவுட்டு பேசலாமுனு இருந்தேன். இப்ப தான் ராதா சொல்லித் தெரியும். இந்த காலத்து பசங்க எல்லாம் அவாளே முடிவு பண்ணிடறா."
"ஆமா. நமக்கு வேலையே வைக்கிறது இல்லை"
"உங்க பூர்வீகம் எல்லாம்?"
"டிவிஎஸ்ல இருந்தேன். போன வருஷம் வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிண்டுட்டேன். வானமாமலை மடம், நைத்ருபகாஷயப கோத்திரம் , நாலூரார் மாடபூசியார் வம்சம்.,, ஈடு உபகரிச்சவானா வம்சம்னா எல்லாருக்கும் தெரியும்"
"ஓ. தெரியாது."
"உங்க பூர்வீகம் மெட்ராஸா?"
"இல்ல இல்ல கும்பகோணத்துக்குப் பக்கத்துல குடவாசல். அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் பரம்பரை கேள்விப்பட்டிருப்பீங்களே. ஷடமர்ஷண கோத்திரம். பாட்டனார் எல்லாம் மூணு வேளை அக்னி வளர்த்தா. இப்ப நாங்க இரண்டு வேளை விளக்கேத்தறோம். அஹோபில மடம்.. போன மாசம் அழகிய சிங்கர் திருநட்சத்திரத்துக்கூட போயிருந்தோம். மூணு வேளையும் நல்ல சாப்பாடு. வயசான காலத்துல ஏதோ கைங்கரியம்... எதுக்கும் ஜாதகத்தை அனுப்பினா பார்த்துடலாம். எனக்கு அதில எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்ல, ஜெயா டிவியில கார்த்தாலே வருவாரே காழியூர்.. அவர் எங்காத்துலேர்ந்து நாலு வீடு தள்ளித்தான் இருக்கார். வாக்கிங் போகும் போது தினமும் பார்ப்பேன். சும்மா அவரிடம் காமிக்கலாமேனு"
"பேஷா..நீங்களும் அப்படியே ஜாதகத்தை அனுப்பிடுங்கோ, எனக்கு அதில எல்லாம் ரொம்ப நம்பிக்கை உண்டு. என்னதான் சையன்ஸ் வளர்ந்தாலும், தேர் ஆர் சோ மெனி அன் ஆன்ஸர்டு கொஸ்டின்ஸ், இல்லையா ?"
"ஒரு நல்ல நாளா பார்த்து நம்ம ரெண்டு ஃபேமலியும் ஒரு கெட் டூ கெதர் மாதிரி ஏதாவது ஹோட்டல மீட் பண்ணி பழம் பாக்கு வெத்தலை மாத்திடலாம். நிச்சியதார்த்தம் மாதிரி. சம்பிரதாயத்தை விட்டு கொடுக்க முடியாது பாருங்கோ.."
"பேஷா"
"இப்பவே ரிக் கோவிந்தன் வாத்தியாருக்கு சொல்லி டேட்ஸை கொஞ்சம் ஃபிரியா வெச்சிக்கச் சொல்றேன்"
"எங்க வாத்தியார் கூட இருக்கார். பாம்பே, அமெரிக்கான்னு பறந்துண்டு... அஞ்சு அஸிஸ்டண்ட் வெச்சிண்டு கார்ப்பரேட் மாதிரி நடத்திண்டு இருக்கர். ரொம்ப டிமாண்ட் அவருக்கு"
"கூட பிறந்தவா யாரும் இல்ல. எங்க அம்மா வைரத்தோடு, வெள்ளி பாத்திரம் இரட்டைவடம் சங்கலி எல்லாம் இருக்கு. கவலையே பட வேண்டாம்"
"இங்கேயும் அதே தான். எங்காத்துலேயும் கூட பிறந்தவா யாரும் இல்ல,, எங்க பாட்டியோட ஒட்டியாணத்தை வைக்க லாக்கர்ல எடம் போறல. எல்லாம் அவாளுக்கு தான்"
"இரண்டு வைரத்தோடு போட்டா காது தாங்குமானு தான் தெரியல. கூரைப்புடைவை, கொடி, திருமாங்கல்யம் எங்களைச் சேர்ந்தது. ஜமாய்ச்சுடுவோம்."
"இல்லை இல்லை. அது நாங்க வாங்கறதுதான் எங்காத்து சம்பிரதாயம். குழந்தைகள் வந்ததும் அவாளை வெச்சுண்டே பர்ச்சேஸ் எல்லாம் வெச்சுக்கலாம்"
"சமையலுக்கு பட்டப்பாவை புக் பண்ணிடலாம், இரண்டு ஸ்வீட் எல்லாம் போட்டு அசத்திடலாம்"
"ஆங்... கேட்க மறந்துட்டேனே.. ராதா போட்டோவையும் அப்படியே அனுப்பிடுங்கோ. என் ஈமெயில் ஐடி ஈஉநரசிம்மாசாரி அட் யாஹூ டாட் இன்"
"நீங்களும் அப்படியே லக்ஷ்மி போட்டோவை அனுப்பிடுங்கோ, பாட்டி பெரியம்மா எல்லாம் பார்க்க்ணும்னா. ஈமெயில் ஐடி பாச்சா அண்டர்ஸ்கோர் அக்னி ஆட் ஜீமெயில் டாட் காம். சித்த புடைவை உடுத்திண்டு இருக்கும் போட்டோவா இருந்தா நல்லது. எங்காத்து பெரிவா எல்லாம் கொஞ்சம் ஆர்தோடாக்ஸ்""
"என்ன புடவை கட்டிண்டு போட்டோவா? லட்சுமி, ஸ்கூல்ல ஃபேன்ஸி டிரஸ்ல கூட நேரு வேஷம்தான் போட்டுண்டான். நீங்கத்தானே பொண்ணு போட்டோவை எங்களுக்கு அனுப்பணும்"
"என்ன ஸ்வாமி ? என்ன சொல்றேள்? நீங்க ராதாவோட அப்பா தானே?. ராதா உங்க பொண்ணுதானே?"
"ஆமாம் ராதாவோட அப்பா தான். ஆனா ராதா பொண்ணு இல்ல சார்; என் பையன். பேர் ராதாகிருஷ்ணன். அதிருக்கட்டும், நீங்க தானே லக்ஷ்மியோட ஃபாதர் ?
"ஆமாம். நான்தான் லக்ஷ்மியோட ஃபாதர். அவன் முழுப் பேர் லக்ஷ்மி நாராயணன். சார்...."
"..."
"...."
"சாரி. ஏதோ ராங் நம்பர்னு நினைக்கிறேன்"
"ஆமாம்"
அதற்குப் பிறகு பாச்சவுக்கும், நரசிம்மனுக்கும் கிட்டத்தட்ட நடுராத்திரியில் கால் வந்தது. அமெரிக்க ‘ரீங்’ நீட்டி முழக்கி வந்த போது, பாட்டி எழுந்துவிட்டாள். எழுந்தவுடன் பாத்ரூம் பக்கம் போனாள்.
"குழந்தை நீ கொடுத்த நம்பர்ல இருக்கிறவர் பிள்ளையோட பேர் ராதாகிருஷ்ணன்னு சொல்றார்... நம்பர் தப்புனு நினைக்கிறேன்"
"இல்லப்பா நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்"
"என்ன... என்னடா சொல்றே?"
"எனக்கு ஒரு பார்ட்னர் வேணும். யாரை பண்ணிண்டா என்ன ? அவனுக்கும் எனக்கு ஒரே வேவ் லெங்க்த்..."
"என்னடா உளறலா இருக்கு இது? இது எல்லாம் நார்த்துல்ல தான் இருக்குனு நினைச்சேன். இப்ப நீ இந்த குண்டத் தூக்கி போடறே"
"என்னப்பா, இன் 21ஸ்ட் சென்சரி, இது எல்லாம் இங்க சகஜம்"
"சகஜமுமாச்சு.. மண்ணாங்கட்டியும் ஆச்சு....நம்ம கல்ச்சர்... என்ன எழவு இது... டேய், இது எல்லாம் நம்மாத்துக்கு ஒத்துவராதுடா. வி ஆர் இன் இந்தியா"
"ஃப்யூ மன்த்ஸ் பேக் இண்டியன் கவர்மெண்டே இத ஓ.கேனு சொல்லியிருக்கு"
"அது எல்லாம் பாலிடிக்ஸ்"
"டிரை டூ அண்டர்ஸ்டாண்ட். இட்ஸ் ஹ்யூமன் ரைட்ஸ் பா"
"ஹ்யூமன் வேல்யூஸ் எல்லாம் பாழாப் போயிடும். உன் மூளை ஏண்டா இப்படி கெட்டுபோச்சு?. கண்ட கண்ட புக்ஸ் படிச்சா.."
"தட்ஸ் வை வி ஆர் கெட்டிங் நோபல் பிரைஸ் ஒன்ஸ் இன் அ சென்ஞ்சுரி"
"ஐ திங்க் யூ ஹேவ் டு கன்சல்ட் ஏ சைகியாட்ரிஸ்ட். உனக்கு பைத்தியம் புடுச்சிருக்கு.."
"ஏன்ணா, செத்த இங்கே கொஞ்சம் வாங்கோளோன்.."
"நீ வேற... இருடி... செத்தா எப்படி அங்கே வருது?"
"அப்பா ஐ திங் யூ ஆர் நாட் இன் குட் மூட், நாளைக்கு திரும்ப பண்றேன். கீப் கூல் இதுல ஒண்ணும் தப்பு இல்ல"
"..."
"...."
பாத்ரூம் போன பாட்டி வெளியே வந்து, "கோலங்கள் சீரியல் அடுத்த வாரம் முடியற்தாமே, அப்படியா ?" என்றாள்
"ஏம்மா நம்மாத்து கதையே சீரியல் மாதிரி அலங்கோலமா. இருக்கு. போய் படுத்துக்கோ"
"என்னதான் சொல்றான் லக்ஷ்மி?"
"என்ன சொல்றது? எல்லாம் நம்ம தலையெழுத்து, ஆம்பளையை ஆம்பள கல்யாணம் பண்ணிக்கிறதாம். கேக்கவே கண்றாவியா இருக்கு"
"ஏதோ இதுவரைக்கும் ஐயங்கார் பையனா பார்த்து லவ் பண்ணானே. அது மட்டும் சந்தோஷம்...." என்று சொல்லிவிட்டு சின்னதாக இருமிவிட்டுப் படுத்துக்கொண்டாள் சூடி என்கிற சூடாமணிப் பாட்டி.
Super KUSUMBU!
ReplyDeleteTamil Dostana ;)
ReplyDeletesema :-))))
ReplyDeletesuperrrrrrrrrrr
ReplyDeleteதேசிகன்! இதோ சுஜாதாவின் கதை! பதிவர் யெக்ஷாவின் புண்ணியத்தில்!
ReplyDeleteரிசப்ஷன் 2010
ஆறரைக்கு ரிசப்ஷன் என்று ராமலிங்கத்தின் வி-மெயில் அறி வித்தது. ஏழரைக்கு ஏர்போர்ட்டில் ஒரு
ஐகான் இருந்ததால், ஆறு பதினாலு நாற்பத்தேழுக்கே புறப்பட்டுவிட்டேன். ஹாலந்தில் இருந்து ட்யுலிப் மலர்க்கொத்து காரில் காத்திருந்தது. ராமலிங்கத் துக்குப் பிடித்த பானமான 'மே 22’ ஒரு காஸ்க் கொள்ளை விலை கொடுத்து வாங்கி வைத்திருந்தேன். கல்யாணத்துக்குப் பொருந்தாத பரிசுப்பொருளோ என்று யோசித்தேன். வேறு என்ன கொடுப்பது?
எல்லாப் புத்தகங்களும் வலையில் உள்ளன. ராஜேஸ்வரியருகில் பார்க்கிங் இருப்பதாக ஜிபிஎஸ் சொன்னது. மாடி எண்ணை பைக் கணினி மனப்பாடம் செய்துகொண்டதற்கு அறிகுறியாக பீப்பியது. லிஃப்ட்டில் இறங்கி க-மண்டபத்தில் நுழையும்போது Aruna weds Ramalingam என்று பாலிமர் எழுத்துக்கள் பொருத்திக் கொண்டிருந்தார்கள். சீக்கிரம் வந்துவிட்டதால் மெள்ள நடந் தேன்.
மணமக்களின் மேடை காலியாக இருந்தது. ஆர்க்கெஸ்ட்ரா ஸின்தரானைச் சுருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ரிசப்ஷன் பெண்கள் நீல ரோஜா மலர்களையும், லோ காலரி கல்கண்டையும் தட்டில் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி குஜராத்தி உடையில் சூப்பராக இருந்தாள். பழக்கதோஷத்தில் ''நீங்க ராமலிங்கத்துக்கு உறவா?'' என்று கேட்டேன்.
''இல்லைங்க... நாங்க கன்ட்ரோல்ல டைனமிக்ஸ் ஹாஸ்டர்ஸ்ங்க..!''
போச்சுடா, ரோபாட்!
இப்போதெல்லாம் மனிதர்க ளுக்கும் இயந்திரங்களுக்கும் வேறுபாடே இல்லை. கன்னக்குழி கூட அப்படியே செய்கிறார்கள். உரித்துப் பார்த்தால்தான், அந்தரங்க முடி அக்ரிலிக் என்று தெரியும். ஒருமாதிரி லூபாயில் வாசனை வரும்.
அந்தப் பெண் 'களுக்’ என்று சிரித்தாள். அதைப் பார்த்தால் கவியரசு கணிதாசன் சொன்னது போல, ''ஏமாந்த கவிஞர்கள் எழுநூறு கவிதை செய்வர்!''
ஏகதேசம் காலியாக இருந்த ஹாலில் போய் வீற்றேன்.
''ஹாய்ஸ்ஸ்ஸத்யா... என்ன இவ்வளவு சீக்கிரம்...?'' என்றபடி வந்தான் ராமலிங்கம். கருநீல சூட் அணிந்து, ஸ்ப்ரே தெளித்து வாரி யிருந்தான். கல்யாணத்துக்கென்று முடியை வைக்கோல் நிறத்துக்கு மாற்றியிருந்தான். மூக்கைத் திருத் தியிருந்தான்.
''எங்கே, வாழ்க்கைப் படகில் உன்னோடு துடுப்புப் போடப் போகிற அருணா..?''
''அருணாவுக்குத்தான் காத்துக் கிட்டிருக்கேன். கமான்... வாழ்க் கைப் படகு, துடுப்பு... என்னடா 'ரொமான்டிக்’காயிட்டிருக்கே..? நீயும் கல்யாணம் பண்ணிக்க ணுமா..? அம்மாகிட்டே சொல் லவா?''
''ச்சே! 'ராமலிங்கம் கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டானா’னு அம்மா ஆச்சரியப்பட்டுப் போயிட்டா. முதல்ல எப்ப சந்திச்சே..?''
''போன வாரம் நம்ம வெங்கி கல்யாணத்துல... லவ் அட் ஃபர்ஸ்ட் மில்லி செகண்ட்! ஒரே ரசனை, ஒரே சாப்பாடு, ஒரே கணிபாஷை எல்லாம். பிடித்த கவிஞர்கள்கூட ஒரே ஒரே... நூறாண்டு காலம் ப்ராஸ்தெட்டிக் வாழ்க்கை வாழ உத்தேசம்..! எக்ஸ்க்யூஸ் மி, அலங்காரமெல்லாம் ஆயிடுச்சுனு நினைக்கிறேன். நீ நேர்ல வர முடிஞ்சதுக்குச் சந்தோஷம். எல்லோரும் வி-மெயில்லயே நழுவறாங்க. ஒரு நிமிஷம்... அழைச்சுட்டு வந்துர்றேன்...''
மெள்ள மெள்ளக் கூட்டம் சேர ஆரம்பிக்க, ராமலிங்கம் அதில் மறைந்தான். வாசலை நோக்கி விரைந்தான். நான் அருணாவைப் பார்க்க ஆவலாகக் காத்திருந்தேன். ராமலிங்கத்தின் மனதைக் கவர்வது அத்தனை எளிதல்ல. எல்லாவற்றிலும் வித்தியாசமானவன். கணிமேதை. மேடைக்குச் செல்லும் முன், ஒரு முறை தெரிந்தான்.
கடிகாரம் 'ஆறு நாற்பது முப் பது’ என்றது. 'காலம் பொன்னானது’ என்று போதனை வேறு.
''ஷட் அப்..!'' என்றேன்.
''ஏர்போர்ட்டில் ஏழரைக்கு இருந்தாகணும். ப்ளேன் லேட்டா வதில்லை. என் கடமை சொல்ல வேண்டியது...''
''வர வர உனக்குப் பிரசங்கம் அதிகமாகிவிட்டது. ஒரு நாள் உன் ஆக்ஸிலியரி மெமோரியை நோண்டிவிடப்போகிறேன்...''
''நஷ்டம் உனக்குத்தான்; நானூறு ஷா. இன்னும் தவணையே முடியவில்லை'' என்றது.
ராமலிங்கம் நண்பர்கள் சூழ வந்தான். அவன் பின்னால் மறைந்திருந்த அருணாவைப் பார்த்தேன். கண்ணுக்கு மை தீட்டி, கன்னத்தில் சிவப்பு ஒத்தி, ஒரு வாட்டசாட்ட தேவதை போல...
வெயிட் எ மினிட்!
''அருணா... சொன்னேன் பார்த்தியா, இது என் அருமை நண்பன் சத்யா...''
நெருங்கினேன்.
''ஹாய், ஐம் அருணாசலம்!''
அவன் கைகுலுக்கல் மென்மையாக இருந்தது.
Lakshmi & Radha Kalyanam - Climax is super.. I didnt expect that... :)
ReplyDeletesuper!
ReplyDeletevery interesting thanks for enabling to read interstjng comedy sujatha style
ReplyDelete