Skip to main content

Posts

Showing posts from July, 2008

பெண்களூர்-0 9

"சார், உங்களிடம் வேலை செய்யும் குமார் (பெயர் மாற்றப்படுள்ளது, அவர் ஒரு பெங்காலி) பக்கத்தில் இருக்கும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவருக்கு அடிப்பட்டிருக்கிற‌தாம்" "என்ன ஆயிற்று?" "என்னவென்று தெரியவில்லை. ஆனால் காரை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதிவிட்டார்களாம்" [%image(20080729-bangalore_dna.jpg|225|158|null)%] புதன் கிழமை மாலை 6:40க்கு செல்பேசியில் இந்த சம்பாஷனை நடைபெற்றது. நான் அந்த சமயம் மீட்டிங்கில் இருந்தேன். மீட்டிங்கை விட்டுவிட்டு எங்கள் அலுவலகம் பக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தேன். குமார் அங்கு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் கண்ணில் கலவரம் தெரிந்தது. "என்ன ஆச்சு குமார்?" "காரை வெளியிலே எடுக்கும் போது ஸ்கூட்டரில் வேகமாக வந்த இருவர் மோதி கீழே விழுந்துவிட்டார்கள். எனக்கு ஒன்றும் ஆகவில்லை, ஆனால் அவர்களுக்கு கை, காலில் சின்ன அடி," என்றார். அடிப்பட்டவர்கள் முதலுதவி பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 45 வயசுக்கு மேல் இருக்கும். என்ன காயம...

எலக்டரானிக்ஸ் கனவுகள்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்த புத்தர் எப்படி இருப்பாரோ அதுபோல் பாதியளவு புத்தர்சிலை திருச்சியில் எங்கள் வீட்டு எதிர்ப்புறம் உள்ள அருங்காட்சியக வாசலில் மழையிலும் வெயிலிலும் கூட சிரித்துக்கொண்டு அமைதியாக இருக்கும். காவிரி ஆற்று மணலில் கண்டெடுத்தது என்று தினத்தந்தி பேப்பரில் நான்காம் பக்கம் படத்துடன் செய்தி வந்தது நினைவிருக்கிறது. புத்தர் வந்த அதே சமயம் 'நானோ எலக்ட்ரானிக்ஸ்' என்ற சின்ன கடையும் எதிர்ப்புறத்தில் 'ரேடியோ, '2-In-One, டிவி ( Solidare, Dynora, JVC, Sony, Panasonic ) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்கள் சிறந்த முறையில் ரிப்பேர் செய்து தரப்படும்' என்ற போர்டுடன் வந்தது. ரிப்பேர் என்பது தவறான‌ பிரயோகம், 'சிறந்த முறையில் பழுது பார்த்துத் தரப்படும்' என்று இருக்க வேண்டும். புத்தருக்கும் எனக்கும் தமிழ் படிக்கத் தெரிந்திருந்தால் அன்றே சொல்லியிருப்போம். ஒரு முறை எங்கள் வீட்டு டேப் ரிக்கார்டர் பழுதான போது, அங்கே எடுத்துச் சென்றேன். கடையில் இருந்தவர் அதை திறந்து பார்த்து, "தம்பி பெல்ட் அறுந்துபோச்சு. இரண்டு ஹவர் கழித்து வாப்பா," என்றார். திரும்...