இவர் எழுத ஆரம்பித்த போது இவருக்கு வயது 56. தற்போது இவருக்கு வயது 58! இவர் கதைகள் பாக்கியா, குமுதம், சிநேகிதி, ராணி nilacharal.com போன்ற பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இவர் எழுதிய நாவல் பெண்மணி மாத இதழில் வந்துள்ளது. இவரது சிறுகதைகளை இவரே வானொலியில் வாசித்துக்காட்டியுள்ளார். 'குழந்தை தொழிலாளர்கள்' பற்றி இவர் எழுதிய கதைக்கு தமிழக அரசு இரண்டாம் பரிசு கொடுத்து கவுரவித்துள்ளது. கர்னாடக சங்கீதம் பிடித்த இவருக்கு எழுத எல்லா ஊக்கமும் தந்தவர் இவர் கணவர் ராகவன். இவ்வளவு எழுதும் திருமதி புஷ்பா ராகவ்ன் படித்தது 8ஆம் பகுப்பு மட்டுமே. இந்த பதிவில் தன் 'nostalgia' நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார்... ( தொடர்ந்து என் வலைப்பதிவில் எழுதுவார் என்று எண்ணுகிறேன்) பொடிடப்பா - புஷ்பா ராகவன் நான் எப்போதாவது தனிமையில் அமர்ந்திருக்கும் போது என் இள வயது நினைவுகளில்; மூழ்கிவிடுவேன். இனிமையும்,குறும்பும் நிறைந்த பருவம் அது. எனக்கு எட்டு வயது. எனக்கு கீழ் ஏழு ,ஆறு ,ஐந்து ,வயது நிரம்பிய தங்கை தம்பிகள், பள்ளியில் முழுப்பரிட்சை முடிந்து விடுமுறை வந்துவிட்டால் எங...