முன்பு சோழர் பற்றி ஒரு பதிவு எழுதியது ஞாபகம் இருக்கலாம். ( படிக்காதவர்கள் இங்கு பார்க்கவும் ) நேற்று குரு சுப்பிரமணியம் அவர்களின் வலைப்பதிவில் இந்திய கோயில்களை பற்றிய ஒரு விவரணப்படம் படம் ஒன்று கிடைத்தது என்று எழுதியிருந்தார். நானும் முன்பு எப்போதோ டிவியில் இதை பார்த்திருக்கிறேன். ஹெலிக்காப்டரில் ஸ்ரீரங்கம், தஞ்சை பெரிய கோயில்களள பார்க்க பார்க்க ஒர் வித சந்தோஷம் கிடைக்கிறது. மூன்று வருடத்திற்கு முன் Birds eye viewவில் நான் வரைந்த ஸ்ரீரங்கம் படமும் ஹெலிக்காப்டரில் ஸ்ரீரங்கமும் ஒத்துப்போவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. [%popup(20060621-srirangam_birds_eye_view.jpg|500|351|படம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்)%] 52 நிமிடம் ஓடும் இந்த படத்தை எல்லோரும் ஒரு முறை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.