"மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிப்புத் தூருறை வான்தன் பொன்னடி காண்பதோ ராசையி னாலே பொருகயற் கண்ணிணை துஞ்சா.." [%image(20050829-srivilliputhur_gopuram.jpg|188|250|ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்)%] என்று ஆண்டாள் பாடியுள்ள ஸ்ரீவல்லிப்புத்தூருக்கு கோகுலாஷ்டமி அன்று சென்றிருந்தேன். திருச்சி மதுரை பைபாஸ் சாலை வழியே 1066 டயல் செய்தால் ஆம்புலன்ஸ் உடனே வரும் என்ற அறிவுப்புக்களை பார்த்துக்கொண்டு 80 கிமி வேகத்தில் சென்றால் மூன்று மணி நேரம் ஆகிறது. இந்த கோயில் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி வடபத்ரசயனர் கோயில். இந்த பெருமாளுக்கு தான் ஆண்டாள் தன் மாலையை சூடிகொடுத்தாள் என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன. இதன் நுழைவுவாயில் இருக்கும் இராஜகோபுரம் 196அடி உயரம்; 11 நிலைகள்; 11 கலசங்களையும் கொண்ட கோபுரத்தின் அகலம் 120' x 82' ஆகும். இந்த கோபுரம் தமிழ்நாடு அரசின் முத்திரைச் சின்னமாக விளங்குகிறது. [%image(20050829-logo.jpg|85|88|TN logo)%] இந்த ராஜகோபுரத்தை பெரியாழ்வாரால் ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னன் (கிபி 765-815) உதவியோடு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோபுரத்தின...