ஆனந்த விகடன் 27.2.05 இதழில் என் சிறுகதை பற்றிக் கேள்விப்பட்டு, ஏஞ்சல் அனாமிகாவின் தாய் பிரமிளா சுகுமார் ஓர் உருக்கமான கடிதம் எழுதி, அனாமிகாவின் "தேவதைக் கிறுக்கல்கள்" புத்தகத்தையும் இணைத்து அனுப்பி இருந்தார்.
தன் நாய்க் குட்டிகளுக்கு ஜீனோ, பூக்குட்டி என்று பெயர்கள் வைத்த அந்தப் பெண், பதினான்கு வயதில் சுனாமியால் மறைந்து போய்விட்டாள் என்கிற செய்தியின் சோகத்துடன் படிக்கும் போது, இந்தக் கிறுக்கல்களில் சில சமயம் ஒரு premonition அதாவது, நடக்கவிருப்பதை முன்கூட்டியே உணரும் தன்மை இருப்பது தெரிகிறது ("எப்பொழுது இறப்போம், மறுபடியும் பிறப்போமா?").
தந்தையின் பாசத்துடனும், தாயின் இலக்கிய ஆர்வத்துடனும், தங்கள் நாட்டின் சுதந்திர தாகத்துடனும் வளர்க்கப்பட்ட பெண்ணின் ஆசைகள், கனவுகள், வியப்புகள், சித்திரங்கள் எல்லாமே பாசாங்கற்ற Ôதேவதைக் கிறுக்கல்கள்’ ஆகின்றன.
மழை பெய்யும்பொழுது
எங்கள் வீட்டு விறாந்தையில்
இருந்துகொண்டு
மழையைப் பார்த்துக்கொண்டு
கிட்டார் வாசிக்க ஆசை.
நான் சாப்பிடுவதை
அழகு பார்க்கும் அம்மா
தொலைபேசியில்
Ôசொல்லுடாÕ என
மெல்லக் கிள்ளிவிடும்
அப்பா.
அவளுள் வசித்த தேவதை விடைபெறுவதற்கு முன், அவள் விடைபெற்றுவிட்டாள். இந்தத் தாய்க்கு நான் என்ன ஆறுதல் சொல்வது? அனாமிகாவின் நினைவை நிரந்தரமாக்க, அவளத்த பெண்களுக்கு ஒரு விருது அறிவிக்குமாறும், படைப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவுவதாகவும் யோசனை சொல்லியிருக்கிறேன்.
(தேவதைக் கிறுக்கல்கள், ஏஞ்சல் அனாமிகா, பாலசுகுமார் பதிப்பகத்தின் முகவரி இல்லை. விலை இல்லை. balasugumar@yahoo.com க்கு மின்னஞ்சல் அனுப்பினால் பிரதி கிடைக்கலாம்.)
இந்த வார கற்றதும் பெற்றதும்
-சுஜாதா
நன்றி: ஆனந்த விகடன்
இதை பற்றிய என் முந்தைய பதிவுகள்
Comments
Post a Comment