Skip to main content

Posts

Showing posts from May, 2004

சுஜாதாவும் நானும்

என் அப்பா தான் எனக்கு சுஜாதாவின் கதைகளை அறிமுகம் செய்து வைத்தார். (இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்). குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் சுஜாதாவின் தொடர்கதைகளை மிகவும் விரும்பிப் படித்து என்னிடம் அதைப் பற்றி சிலாகித்துப் பேசுவார். நானும் ஏதோ சொல்கிறார் என்று கேட்டுக்கொள்வேன். நான் படித்தது ஆங்கிலோ இந்தியன் பள்ளியில். அங்கு தமிழ் சுமாராகத் தான் கற்றுத் தருவார்கள். நானும் ரொம்ப திக்கித் திணறி பாஸ் செய்வேன்; எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டிப் படிப்பேன். கோனார் நோட்ஸுக்கே ஒரு நோட்ஸ் எனக்குத் தேவைப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான் காலேஜில் படிக்கும் போது ஒரு நாள், அப்பா அடிக்கடி ஏதோ 'சுஜாதா, சுஜாதா' என்று சொல்கிறாரே என்னதான் எழுதுகிறார் பார்க்கலாமே என்று, திருச்சி ஜங்ஷனுக்குப் போய் ஒரு லெண்டிங் லைப்ரரியில் சுஜாதா புத்தகம் ஒன்று எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முன்பே சொன்னது போல் என் தமிழ் புலமை அதிகம் ஆதலால் மிகவும் மெதுவாகப் படித்தேன். ஒரு வாரத்தில் படிக்க வேண்டிய புத்தகத்தை இரண்டு மாதத்தில் படித்து முடித்தேன். அந்த புத்தகம் படித்தவுடன், சுஜாதாவின...

எனது முதல் பதிவு

என்னை சந்திக்கும் சிலர் கேட்கும் கேள்வி - ஏன் இன்னும் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கவில்லை ? என்பது தான். எதாவது ஒரு காரணம் சொல்லி மழுப்புவேன். காரணம் இதுதான் - எழுதுவதற்கு முதலில் சரக்கு வேண்டும் அது என்னிடம் இல்லை. அடுத்ததாக நேரம். பல வலைப்பதிவுகளை பார்த்தபின் மேலும் பயமாக இருக்கிறது. வலைப்பதிவுகள் மிக அழகாக வடிவமைக்க பட்டுள்ளது. உதாரணம் காசி, பத்ரி, வெங்கட் மற்றும் பலர். என்ன எழுதுவது ? இந்த கேள்வி தான் நான் வலைப்பதிவு ஆரம்பிப்பதற்கு தடையாய் இருக்கிறது. கடைசியாக எதாவது சமையல் குறிப்பு கொடுக்கலாம் என்றால் ஷைலஜா இலை போட்டு முந்திக் கொண்டுவிட்டார். ஒரு முறை பத்ரியை சந்தித்த போது என்னப்பா எழுதுவது ? என்று கேட்டேன், அவர் நீ எதுக்குப்பா எழுதணும் எதாவது படம் போடு என்றார். ('அந்த மாதிரி (படம் போடும்) கண்றாவியெல்லாம் நான் செய்வதில்லை' என்று சமீபத்தில் அவர் வலைப்பதிவில் பார்த்தேன்! ) சிலர் ஜிமெயில் இலவசமாக கிடைக்கிறது ஆரம்பி என்று மெயில் அனுப்பினார்கள். ஒருவழியாக இன்று ஆரம்பித்துவிட்டேன்!. கடந்த ஆண்டு (2003) ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து கதைகளுக்காக' நான் சுமார்...