Skip to main content

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் – புத்தக வெளியீட்டு அறிவிப்பு

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் – புத்தக வெளியீட்டு அறிவிப்பு





எல்லோருக்கும் இனிய ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி நல்வாழ்த்துகள்!

இந்த நன்னாளில், ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை சார்பாக, 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தை' அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட "குட்டிப் பெண்ணின் குட்டி கதைகள்" என்ற நூல் முடியும் தருவாயில் உள்ளது என்பதையும், விரைவில் அச்சுப் பணிகள் தொடங்க உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏன் இந்த புத்தகம்?

"குழந்தைகளுக்கு எழுதுவது சுலபம் என்று சிலர் நினைக்கலாம்; ஆனால் குழந்தைகளுக்கு எழுதுவதுதான் கஷ்டம்" - இதை சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி!

இன்றைய 'ஏ.ஐ' (AI) 'ரோபோடிக்ஸ்' உலகில், அறிவு அசுர வேகத்தில் வளர்ந்தாலும், அன்பும், பண்பும் எங்கோ தொலைந்துவிட்டது.  ஒழுக்கமில்லாத அறிவு ஆபத்தானது! நிலத்தை கிண்டிவிட்டால் விளைச்சல் நன்றாக இருக்கும். குழந்தைகளின் மனமெனும் விளைநிலத்தை இப்போதே பக்குவப்படுத்தினால், எதிர்கால விளைச்சல் நன்மையாக இருக்கும். இந்தப் புத்தகத்தின் கதைகள் பக்தியையும், மனிதப் பண்புகளையும் குழந்தைகளுக்கு மிக எளிமையாகக் கற்றுக்கொடுக்கும்.

புத்தகத்தின் சிறப்பம்சங்கள்:

  • எளிய மொழி: ஏழு முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் புரியும் வகையில், ஆங்கிலம் அல்லது கொச்சைத் தமிழ் கலக்காத எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.இது கதையை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்குத் தமிழைச் சரியாகக் கற்றுக்கொள்ளவும் இது உதவும். 

  • எமோஜிக்கள் (Emojis): இன்றைய 'ஜென்-சி' (Gen-Z) தலைமுறைக்கு ஏற்றவாறு ஆங்காங்கே எமோஜிக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, "அவன் சோகமாக 😣 இருந்தான்" என வாசிக்கும்போது, அந்தச் சொல்லின் பொருள் தெரியாத குழந்தை அதில் வரும் எமோஜிக்களிம் மூலம் உணர்வைப் புரிந்துகொள்ள முடியும்.

  • வண்ண ஓவியங்கள்: குழந்தைகளைக் கவரும் வகையில் சுமார் 85 முழு பக்க வண்ணப்படங்கள் (Full-color illustrations) இதில் உள்ளன. கதையைக் கேட்டுவிட்டுப் படங்களைப் பார்த்தாலே, அந்தக் காட்சிகள் அவர்கள் மனதில் இன்பத்தைக் கொடுக்கும். 

  • வண்ண எழுத்துக்கள்: ஓவியங்கள் மட்டுமன்றி, சிறுவர்கள் படிக்கும்போது சலிப்படையாமல் இருக்க, கதையின் வரிகளும் சூழலுக்கு ஏற்ப வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இது ஒரு ‘விஷுவல்’ அனுபவத்தைக் கொடுக்கும். 

  • வடிவம் & தரம்: பெரிய Crown ¼ அளவு, உயர்தர 80 GSM பேப்பரில் 350 பக்கங்கள் கொண்ட வண்ணமயமான நூல். .

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை உங்கள் குழந்தைகளுக்கு 'பெட் டைம்' (Bedtime) கதைகளாகப் படித்துக் காண்பியுங்கள். அவர்களுக்குப் புரிந்துவிட்டால் அதுவே என் நீண்ட நாள் ஆசைக்குக் கிடைத்த வெற்றி. நம் சனாதன தர்மத்தை அவர்கள் மனதில் விதையாகத் தூவினால், அது என்றாவது ஒருநாள் அவர்களை நிச்சயம் நல்வழிப்படுத்தும். உங்களுக்குள் ஒரு குழந்தை உள்ளம் இருந்தால், நீங்களும் தாராளமாகப் படித்து மகிழலாம்!

முன்பதிவு விவரங்கள்:

இன்றைய ராமானுஜ ஜெயந்தி நன்னாளில், இந்தப் புத்தகத்திற்கான முன்பதிவைத் தொடங்குகிறோம்.

  • விலை: ₹ 600/- (350 பக்கங்கள், முழு வண்ணம்).

  • வெளியீடு: புத்தகப் பணிகள் முடிந்ததும், திருக்கோளூரில் எளிய முறையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

புத்தகம் பெற விரும்புவோர்:

கீழே உள்ள தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் பிரதிகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

அன்புடன், சுஜாதா தேசிகன் 22.4.2026 சித்திரையில், திருவாதிரை ஸ்ரீ உடையவர் திருநட்சத்திரம்

புத்தகம் பெற விரும்புவோர்: கீழே உள்ள தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் பிரதிகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். புத்தகத்தின் விலை தபால் செலவுடன் ரூ600/-

புத்தகம் பெற விரும்புகிறவர்கள்.

உங்கள் பெயர்/Name: முழு முகவரி/Address: தொலைப்பேசி எண்/Phone number: தேவையான பிரதிகள்/Required copies:

என்ற விபரங்களை rdmctrust@gmail.com மின்னஞ்சல் அனுப்பிவிட்டு புத்தகத்துக்கான தொகையைக் கீழே தரப்பட்டுள்ள டிரஸ்ட் அகவுண்டுக்கு அனுப்பவும். Pl also send the transaction details to rdmctrust@gmail.com so that it is easy for us to track.

Name: Ramanuja Desika Munigal Charitable Trust STATE BANK OF INDIA, BRIGADE METROPOLIS, BANGALORE Account no : 37954692708 Type: Current Account IFSC Code:- SBIN0015034


Comments