ஸ்ரீராமர் என்ற ரக்ஷகன் ஸ்ரீராம ஜன்ம பூமியில் குழந்தையான ’ஸ்ரீராம லல்லா’ எழுந்தருளுவதற்கு பல நூற்றாண்டுகளாக பலர் போராடினர். கடைசியாக அந்த வழக்கு முடிவுக்கு வந்து, பிராணப் பிரதிஷ்டையை டிவியில் தரிசித்த அன்று அதன் முன் விழுந்து சேவித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. எல்லோர் இல்லங்களிலும் ஒரு குழந்தை பிறந்த சந்தோஷத்துடன் இனிப்பு செய்து, வழங்கி இந்த பாரத தேசமே கொண்டாடியது. அயோத்தியில் ஸ்ரீராமரை சேவிப்பதற்கு முன், சென்னைக்கு சென்று காலணி கூட அணியாமல் வாதிட்ட வழக்கறிஞர் ஸ்ரீ பராசரனை சந்தித்து சேவித்தேன். (“நான் என்ன ஜீயரா? இவ்வளவு முறை சேவிக்கிறீர்கள்”). ’போற்றப் பறைதரும் புண்ணியன்’ என்று ஆண்டாள் கொண்டாடும் ஸ்ரீராமபிரானின் ஆலயத்தை இந்தப் புண்ணிய பூமியில் தரிசிக்க முடிந்ததே நம் மேலையார் செய்த புண்ணியத்தின் பயன். சமீபத்தில் ஒரு தலையங்கத்தில், அயோத்தி ராமர் சந்நிதியின் கருவறை முகப்பில், வால்மீகி ராமாயணத்தில் இல்லாத 'ஸ்ரீராமர் லிங்க பூஜை செய்தார்' என்ற கதைக்குரிய சிற்பம் தவறாக அமைக்கப்பட்டுள்ளது என்று கண்டித்துள்ளார்கள். 'நாம் வணங்கும் ராமரே, தம் ஆலயத்தில் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்...