அரசியல், அவியல், அண்ணாமலை - ஒரு சங்கியின் பார்வையில்... செல்வி ஜெயலலிதா இருந்த வரைக்கும் எப்போதும் அதிமுக கூட்டணிக்குத் தான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். 1996’ல் ரஜினி குரல் கொடுத்த போது ஜெ செய்த செயல்களால் சற்று முகம்சுளித்தாலும் அப்போதும் கூட அம்மாவிற்குத் தான் ஓட்டுப் போட்டேன். தமிழகத்தில் நாத்திகம், தேச விரோத, ஹிந்து துவேஷம், குறிப்பாகப் பிராமணத் துவேஷம் செய்யும் கட்சிகளுக்கு நான் எப்போதும் நான் ஓட்டுப் போட்டதில்லை என்று கூறிக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏன் என்றால் நான் ஒரு சங்கி! ஜெ என்னை வசீகரித்த தலைவர். ஒரு பெண் என்றும் பாராமல் பத்திரிக்கைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை ஆபாசமாகத் தூற்றி பத்திரிக்கை அட்டைப் படத்தில் கேவலமாகச் சித்தரித்த போது அவர்களை ஒரு பெண் சிங்கமாக எதிர்கொண்டார். தமிழர் வீரம், ஜல்லிக் கட்டு என்று வீரம் பேசுபவர்கள் கூட, தங்களால் ஒருவரை வீழ்த்த முடியவில்லை என்றால் உடனே அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் வேலோ கத்தியோ இல்லை. பிராமணர்கள் என்றால் அவர்களுடைய பூணூலும் குடுமியையும், மற்றவர்கள் என்றால் ஜாதி, இனம் அல்லது இருக்கவே இருக்க...