Skip to main content

Posts

Showing posts from July, 2022

வந்தே குரு பரம்பராம்

வந்தே குரு பரம்பராம் எங்கள் வீட்டு பால்கனியில் பூக்கும் கொடி ஒன்று புதுசாக வளந்து வருகிறது. அதற்கு அருகில் சின்ன சுள்ளியை வைத்து மேலே எழுப்பிவிட்டேன். தினமும் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்று பார்ப்பது எனக்கும் என் பையனுக்கும் பொழுதுபோக்கு. இன்று அவன் ”கொடியை சைடில் படரவிட்டால் இன்னும் வேகமாக வளரும்” என்றான். ”அப்படியா ? எப்படி ?” அதன் விடை கடைசியில் தருகிறேன். கூரத்தாழ்வான் அருளிய தனியன் இது. லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் இந்தத் தனியன் வட மொழியிலிருந்தாலும், அர்த்தம் சலபமாகப் புரியும். திருமகள், திருமால் முதற்கொண்டு நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு வழிவழி வந்த குருக்கள் இன்றளவும் அத்தனை ஆசார்யர்களுக்கும் வணங்குகிறேன் கூரத்தாழ்வான் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீ ராமானுஜருடன் குருபரம்பரை முடிவடைந்தாலும், தொலை நோக்குடன் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கணினி கோட் போன்று மிக அருமையாகச் செதுக்கப்பட்ட தனியன் இது. பல நூற்றாண்டுகள் கழித்து வரப் போகும் எல்லா ஆசாரியர்களையும் இதில் அடக்கிவிடலாம். சங்கீதத்தில் எப்படி ஆரோகண, அவரோகண இருக்கிறதோ அதுப...

ஸ்ரீமத் நாதமுனிகள்

 ஸ்ரீமத் நாதமுனிகள்  ஸ்ரீமத் நாதமுனிகள் சன்னதி ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருப்பதே என் அப்பா சொல்லித் தான் தெரியும். ஸ்ரீரங்கவிலாஸ் மண்டபத்தில் கடைகளுக்கு நடுவே ஒரு சந்தில் இருக்கும். சின்ன வயதில் ஒரு நாள் அதைத் தேடிச் சென்று சேவித்துவிட்டு வந்தேன்.   பிறகு ஸ்ரீமத் நாதமுனிகள் அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோயிலில் அவர் பேரனான ஆளவந்தாருடன் சேவித்துவிட்டு அங்கேயே ஒரு முழு நாளை சில வருடங்களுக்கு முன் கழித்தேன்.  பதம் பிரித்த பிரபந்தம் முதல் பதிப்பின் போது அடியேனுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து முன்பே எழுதியிருக்கிறேன்.  ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியார்களில் முதல்வரான ஸ்ரீமத் நாதமுனிகள் வீரநாராயணபுரத்தில் தான் அவதரித்தார்.(அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார்) ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்கள் காலப் போக்கில் மறைந்து போயின. அவைகளைத் தொகுத்த பெருமை ஸ்ரீமத் நாதமுனிகளையே சாரும். ஒரு சமயம் வீரநாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளைச் சேவிக்க சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியி...