Skip to main content

Posts

Showing posts from October, 2018

சென்னை இரண்டு நாள் முன்...

முந்தாநாள் காலை தூறலும் ரயிலும் ஒன்றாக நின்ற சமயம் சென்னை வந்தடைந்தேன். சரஸ்வதி பூஜை அன்று பார்த்தசாரதி கூட்டமே இல்லாமல் சேவை சாதித்தார். கொஞ்சம் நேரம் சன்னதியில் நின்று மீசை, நெஞ்சில் இருக்கும் தாயார் எல்லாம் அமுதனுக்குக் காண்பித்துக்கொண்டு இருந்தேன். நிஜமாகவே அன்று தான் ‘பார்த்த’ சாரதியாக இருந்தார். தாயார் சன்னதி குங்கும பாக்கெட் மாதிரி புளியோதரையை மஞ்சள் பேப்பரில் மடித்துத் தருகிறார்கள். புளியோதரையும் மஞ்சள் பொடி வாசனையுடன் முன்பு மாதிரி இல்லையே என்று நியூரான்கள் சொல்லியது . ஆதிகேசவ பெருமாள் கோயில் பேயாழ்வார் உற்சவத்தை நிதானமாகச் சேவிக்க முடிந்தது. பேயாழ்வார் பிறந்த கிணறு எங்கே என்று அமுதன் கேட்க அங்கே சென்று சேவித்துவிட்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் ராயர் மெஸை எட்டிப் பார்த்த போது அங்கேயும் கூட்டம் இல்லை ! மறுநாள் கலைத்துவிட்ட கரையான் புற்றிலிருந்து கிளம்பும் எறும்புகள் போல தி.நகர் முழுக்க கூட்டம். ‘நகையைக் தெரியும் படி அணிந்துக்கொண்டு செல்லாதீர்கள்’, ‘மொபைலில் பேசிக்கொண்டு கட்டைப் பையை பறிகொடுக்காதீர்கள் ஜாக்கிரதை’ என்று ’வணக்க்க்க்ம்’ புகழ் நிர்மலா பெரியசாமி குரலில்...