Skip to main content

சர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்


நேற்று ( 24.6.2018) ”National Seminar on Contribution of Sri Vedanta Desika to Mathematics, Science & Technology" என்ற கருத்தரங்கில் பார்வையாளராக கலந்துகொண்டேன். இராமாயணத்தில் புஷ்பக விமானம் டைப் கருத்தரங்காக இருக்குமோ என்று நினைத்துக் கிளம்பினேன்.

ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கு “கவிதார்க்கிக சிம்மம்”,  ”சர்வ தந்திர சுதந்திரர்”, “வேதாந்தாசார்” என்ற பல விருதுப் பெயர்கள் உண்டு.

பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற்று எனக்கு முன்னோர் ஈட்டிவைத்த பொருள் இல்லை, சொந்த வருவாயும் இல்லை, எனினும் மூதாதையர் காட்டிய வரதராஜர் என்ற அருளாளப் பெருஞ்செல்வம் இருக்கிறது என்று கடைசி வரை மிகுந்த வைராக்கியத்துடன் ஸ்ரீவைஷ்ணவத்துக்கு பல பொக்கிஷங்களை அள்ளித் தந்துள்ளார் (அவர் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பிறகு ஒரு தனி கட்டுரையாக எழுதுகிறேன் )

ஆங்கிலத்தில் matrix, vector, graph theory, encryption, cryptography, compression போன்ற வார்த்தைகள் எல்லாம் கடந்த ஓர் (அல்லது இரண்டு)  நூற்றாண்டு வார்த்தைகள்.

தமிழ் இலக்கியத்தில் பா, பாவகை முதலான யாப்பு போன்ற உத்திகள் பல காலப் போக்கில் தோன்றியது. ஆங்கிலத்தில் palindrome, anagram  என்பது போல இந்த உத்திகள் எல்லாமே விதிமுறைக்கு உட்பட்டதால் சுலபமாக கணிதத்தில் சூத்திரமாக சொல்லிவிடலாம்.

திருமங்கை ஆழ்வார் திருவெழுகூற்றிருக்கை என்பது ஒரு விதமாக எண் அலங்கார கவிதை. நாமும் எழுதலாம் ஆனால் அர்த்தத்துடன் எழுதுவதற்கு அசாத்திய திறமை வேண்டும். இதை இரதபந்தமாகத் தேர் வடிவில் எழுதி இருப்பதைப் பார்க்கலாம்.



சில பாடகர்களுக்கு பாடும் போது சுர வரிசைகள் அப்படியே மண கண்களில் தெரியும் அதை பார்த்து அப்படியே பார்த்து பாடிவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்  இசையும், தாளமும் கணிதம் சம்பந்தப்பட்டது தான். ( சங்கீத பிரியராக இருந்தால் நிச்சயம் அவருக்குக் கணிதம் பிடித்த பாடமாக இருக்கும் ! )  இந்த மாதிரி கவிதை இசை எல்லாம் சுலபமாக ஒரு matrix வடிவத்தில் எழுதிவிடலாம்.

மேலும் திருவெறுகுற்றிருக்கையை ஒரு யோக சாஸ்திரம் என்றும் கூறுவர். பிராணாயாம இயக்கம் எண்ணிக்கையில் அமைந்துள்ளது. பிராணாயாமம் உந்தியில் தொடங்கும் என்று ’திவ்யபிரந்த இலக்கிய வகைகள்’ என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பு இருகிகிறது.

பெரிய திருமொழி பாசுரங்களில் மூன்று வரை ஏழு வரை எண்கள் ஏறுமுகமாக அமைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்கலாம். ”ஆறும் ஆறும் ஐந்துமாய்’ என எண்கள் அடிப்படையில் திருமழிசையாழ்வாரின் பாசுரங்களை எல்லாம் வியக்காமல் இருக்க முடியாது.

ஆழ்வார்கள் கணக்கு மாஸ்டர்களோ, அறிவியல் விஞ்ஞானியொ கிடையாது. ஆனாலும் போகிற போக்கில் ’வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று வானிலையை தொட்டுவிட்டு சென்றார்கள். தமிழில் முனைவர் பட்டமோ அல்லது முத்தமிழ் அறிஞர் போன்ற பட்டங்களோ வாங்கவில்லை. ஆனால் ஆண்டாள்  மிகக் கடினமான ‘இயற்றர விணை கொச்சகக் கலிப்பா’ வகையில் அசால்டாக இயற்றினாள்.

நன்றாக கவனித்தால் ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்கள் இயற்றினார்கள் என்று சொல்ல மாட்டார்கள், அவர்கள் அருளினார்கள் என்றே சொல்வார்கள். எல்லோர் மனத்திலும் பெருமாள் வாசம் செய்கிறான். ஆனால் சிலர் மனதில் மட்டுமே அவன் பிரகாசமாக இருக்கிறான்.

“வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே,- கோயில் கொண்ட கோவலன்”  என்று பெரியாழ்வார் எம்பெருமானுக்குத் தம் திருவுள்ளத்தையே கோயிலாக அமைத்துத் தருகிறார். பெருமாளும் பிரகாசமாக இருக்கிறார்.

அப்படி பிரகாசமாக இருக்கும் போது நமக்கு அருளிச்செயல்கள் கிடைக்கிறது. அதனால் தான் திராவிட வேதம் என்கிறோம். தெய்வ சங்கல்பம் இல்லை என்றால் இந்த மாதிரி ரூம் போட்டு யோசித்தாலும் எழுத முடியாது.

தமிழைப் பெருமாளிடம் communicate செய்ய உபயோகித்து கைங்கரியமும், முக்தியும் என்ற ஒரே இலக்கை நோக்கியே அவர்களும் நம்மையும் பயணிக்க வைத்தார்கள். அப்படி பாசுரங்களை இயற்றிய போது இந்த மாதிரி எண்ணலங்கார ரத்தினங்கள் தெரித்து விழுந்தது. இவை ’by product’ தான். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் என்றுமே ”உனக்கே நா மாட்செய்வோம்” என்ற கைங்கரியம் மட்டும் தான் ‘product’.

பெரியவாச்சான் பிள்ளை போன்ற உரையாசிரியர்கள் எல்லாம் இந்த இலக்கண வகை, அலங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் உரையில் அதில் பொதிந்துள்ள பொருளை மட்டுமே அனுபவித்து எழுதினார்கள்.

கம்யூட்டர் சைன்ஸ் படித்தவர்கள் நிச்சயம் விஞ்ஞானி ’Donald Knuth’ அவர்களின் “The Art of Computer Programming”  புத்தகத்தைப் படிக்காமல் இருந்திருக்க முடியாது. அதில் அவர் Finding Knight’s Tours on an M x N Chessboard என்ற சிக்கலான விஷயத்தை விளக்கியிருப்பார்.

ஆங்கிலத்தில் இதைப் பற்றி சின்ன குறிப்பு :

Problem abstract : How can a knight he moved on a chessboard so that the
Knight visits each square once and only once and goes hack to the starting square? The earliest serious attempt to find a knight’s tour on the chessboard was made by L. Euler in 1759. In this correspondence, a parallel algorithm based on the hysteresis McCulloch-Pith neurons is proposed to solve the knight’s tour problem. The relation between the travelling salesman problem and the knight’s tour problem is also discussed. A large number of simulation runs were performed to investigate the behaviour of the hysteresis McCulloch-Pitts neural model. The purpose of this correspondence is to present a case study-how to successfully represent the combinatorial optimization problems by means of neural network.

டேட்டா பேஸில் சுலபமாக, சீக்கிரமாக எப்படித் தேடுவது, DNA ஆராய்ச்சி போன்ற சிக்கல்களுக்கு இது அடிப்படை என்று சொல்லலாம்.

Knights Problem முழுவதும் புரிந்துகொள்ள கீழே உள்ள இந்த அனிமேசனை பாருங்கள்.



ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஒரே இரவில் 1008 ஸ்லோகங்க்கமாக அருளினார். இதில் 929, மற்றும் 930 பாசுரங்களில் இந்த knights problem அற்புதங்களை எந்த கணினி உதவியும் இல்லாமல் ஏன் மின்னாசரம் கூட இல்லாத போது  நிகழ்த்தியுள்ளார். .

The first verse is written sequentially

929. sThirAgasAm sadhArADhyA vihathAkathathAmathA
sathpAdhukE! sarAsA mA rangarAjapadham naya

and the next is read along the path taken by the knight yielding the result.

930. sThithA samayarAjathpA gatharA mAdhakE gavi
dhuranhasAm samnathAdhA sAdhyAthApakarAsarA



இதில் விஷேசம் இரண்டு பாசுரத்துக்கு அர்த்தம் உண்டு.



இந்த kight problemத்துக்கு உண்டான forumla கீழே:





சத்தியமாக எனக்கு இது புரியாது. ஆனால் இதைப் புரிந்தவர்கள் கூட ஸ்ரீ வேதாந்த தேசிகன் போல எழுத முடியாது. Donald Knuth கூட இன்றைய சினிமா கவிஞர்கள் போல தான் முயன்று இருக்கிறார். அது கீழே



நம் பூர்வாச்சாரியார்கள் were not scientist or mathematicians but they were visionaries வெள்ளைக்காரன் புகழ்ந்தால் மட்டுமே நாம் ஒத்துக்கொள்ளுவோம். Donald Knuth அவர்கள் 2016 ஸ்டான்ஃபோட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையில் இந்த knight problem பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் ஸ்ரீ வேதாந்த தேசிகனின் 929, 930 பாசுரத்தைக் குறிப்பிட்டு புகழ்கிறார்.




( முழு வீடியோ இங்கே இருக்கிறது : https://www.youtube.com/watch?v=DjZB9HvddQk - 56.00 அதிலிருந்து ஸ்ரீ தேசிகனைப் பற்றி குறிப்பிடுகிறார்.  )

நேற்று நடந்த கருத்தருங்கிற்கு Donald Knuth அவர்கள் அனுப்பிய மின்னச்சல் இது


இது வெறும் எடுத்துக்காட்டு தான். இது போல encryption, compression என்று பலவிஷயங்களை நேற்று கேட்டு அனுபவித்தேன். அது வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்.

உடலில் அழுக்கு போவதற்கு சோப்பு போட்டு குளிக்கிறோம். கூடவே நம் உடம்புக்கு அது வாசனையும் தருகிறது. அது போல ஸ்வாமி தேசிகன் அருளிச்செயல்கள் நம் மனத்தைச் சுத்தம் செய்கிறது. கூடவே வாசனையாக இந்த மாதிரி அலங்காரங்கள் வருகிறது. வாசனைப் பார்த்து சோப்பு வாங்கினாலும், அதன் பயன் சுத்தப்படுத்துவது தான். அது போல தான் ஸ்ரீ தேசிகனின் பிரபந்தங்கள். அவர் ‘சர்வ தந்திர சுதந்திரர்’ நான் சொல்லவில்லை ஸ்ரீரங்கம் தாயார் கொடுத்த பட்டம்.

- சுஜாதா தேசிகன்
நாதமுனிகள் திருநட்சத்திரம்
ஆனி அனுஷம்
( 25.6.2018 )

ஸ்ரீ வேதாந்த தேசிகன் படம் - ஸ்ரீ வினோத்.
மற்ற மேற்கோள், படங்கள் இணையம். 

Comments

  1. எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நேற்று அரங்கில் பேசியதை எல்லாம் ஒரே பதிவில் எழுத முடியாது. ஆக இன்னும் பல பதிவுகள் மூலம் நேற்று அனுபவித்தவற்றை மேலும் பல முறை பல விதமாக அனுபவிக்கக் காத்திருக்கிறேன். எல்லாமே அருமை. அவற்றுள் சாஸ்த்ரா திரு கண்ணன் திரு எம் ஏ ஆழ்வார் இவர்கள் உரைகள் மிக அருமை. ஶ்ரீமத் யதுகிரி ராமானுஜ ஜீயரின் ஆசீர் வசன அனுக்ரஹ பாஷணம் உன்னதம். அதை மொழிபெயர்த்து வலையிடுவது அவசியம்

    ReplyDelete
  2. Superb analysis. Excellent write up. Acharyan thiruvadikale charanam .

    ReplyDelete
  3. Desikar Thiruvadigale charanam

    ReplyDelete
  4. கேட்டேன்.ஆனால் ஏற்கனவே ஸ்வாமி தேசிகன்னா அடியேனுக்கு காம்ப்ளெக்ஸ்.அதுவும் கணிதம்னு சொன்ன்வுடன் பயந்தேன்.ஆனால் what a coincidence?..நேற்று ஸ்வாமி துஷ்யத் ஸ்ரீதர் யூ ட்யூபில் இதே ஸ்வாமி தேசிகனை பற்றி இதே விஷயத்தை குறிப்பிட்டிருந்தார்..நீங்கள் பெரிய புதையலை ஆராயவிருப்பது அடியேன் போன்ற அசட்டு ஆர்வலர்களுக்கு கைவிளக்காக இருக்கும் என்றே நம்புகின்றேன்

    ReplyDelete
  5. Further to the earlier comment..this is the vedio link of DS,,from1.06https://www.youtube.com/watch?v=ZHAATuC4UUw&t=6248s

    ReplyDelete
  6. அற்புதமாக ரசித்து கேட்டு அனுபவித்திருக்கிறீர்கள். அந்த அணிமேஷனையும் தேடி போட்டிருக்கிறீர்கள் (ஆரம்பித்த இடத்துக்கு வரவில்லை). இந்தமாதிரி ஒரு கணித சம்பந்தத்துடன் சில பாசுரங்களை முன்பு படித்து வியந்திருக்கிறேன். யார் பதிவு எனவது ஞாபகம் இல்லை.
    ஆழவார்கள் அருளிச் செய்தவர்கள், நிதர்சனம்.
    மிக உயரிய பதிவு. நன்றி.

    ReplyDelete
  7. Starting of the padhukha sahsram itself starts with praising the glory of Thiruvadi...and the way vedhantha Desikar enjoys the beauty of different gems decorating the padhukha of Sri ranga is completely at a different level and it has not been matched up to his standarard by any one else, as of now. This is my "thazhundha abiprayam" pls forgive me if I havue been over reactive.
    Srimathe Nigamantha Maha Desikan Namaha __/!\__

    ReplyDelete
  8. இன்னுமொரு நூற்றாண்டு இரும் என்பதற்கிணங்க இந்த மாதிரியான சத் சமாச்சாரம் காலத்தால் அழியாமல் நம்மையும் பங்கு கொள்ள வைக்கவோ சம்பிரதாயம் வளமுடன் வளர்ச்சி அடைந்து வரும் படியாக

    ReplyDelete
  9. நன்றி. அருமை .ஸ்வாமி ஸ்ரீவேதாந்த தேசிகர் வைஷ்ணவ ஆச்சார்யா விற்கு பிறகு பல்வேறு மஹான்கள் ,வேத விற்ப்பன்னர்கள் மற்றும் சம்பிரதாய சமாச்சாரம் வளமுடன் வளர்ச்சி கண்டு கொண்டே வருபவர்களாலும்; அதற்கும் மேல் இந்த மாதிரியான நவீனமாக்கப்பட்டு மேம்படுத்தும் தாரக மந்திரம் இறைவனின் கடாட்சம் என்றே தோன்றுகிறது என்றால் மிகையாகாது. நன்றி .நன்றி அனைவருக்கும்

    ReplyDelete
  10. Arumai Yana padaipugal.....
    MANAVALA MAMUNIGAL PATRI ... EZHUDUNGAL....ADIYEN...VINNAPPAM...

    ReplyDelete
  11. அருமை! இறை அருள் பொங்கட்டும்!

    ReplyDelete
  12. where to get this book "’திவ்யபிரந்த இலக்கிய வகைகள்’ ?

    ReplyDelete
    Replies
    1. தெரியவில்லை. கூகிளை கேட்க வேண்டும்.

      Delete

Post a Comment