உடையவர் திருவல்லிக்கேணி (படம் : சப்மத் குமார் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி) இராமானுச நூற்றந்தாதியில் ”செழுந்திரைப் பாற்கடல் கண்டு துயில்மாயன் திருவடிக்கீழ்” என்பது அமுதனாரின் அமுத மொழி. ஆண்டாள் அருளிய திருப்பாவையில் ”பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி ” என்ற இந்த வரியும் கிட்டதட்ட அதே மாதிரி இருப்பதைக் கவனிக்கலாம் நூற்றந்தாதி பாசுரத்தை இரண்டு முறை சேவிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பதம் பிரித்த முழு பாசுரம் கீழே. மெதுவாகப் படித்தால் அர்த்தம் சுலபமாக புரியும். செழுந்திரைப் பாற்கடல் கண்டு துயில்மாயன் - திருவடிக்கீழ் விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி - நல் வேதியர்கள் தொழும் திருப் பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்து,இரைத்து, ஆடும் இடம் -அடியேனுக்கு இருப்பிடமே. புரியவில்லை என்றால் பரவாயில்லை. இந்தக் கட்டுரையின் ‘அடிக்கீழ்’ இந்தப் பாசுரத்தின் அர்த்தத்தை சொல்கிறேன். ஸ்ரீவைஷ்ணவத்தில் எம்.ஏ, டாக்டரேட், வேதம்,, கீதை, திவ்ய பிரபந்தம் என்று பல விஷயங்கள் படிக்கலாம், படித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் ’அடிக்கீழ்’ என்ற ஒரு வார்த்தையில் பாம்பை சுருட்டி கூடையில் அட...