“எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்” - சுஜாதா, தனது எழுபது வயது கட்டுரையில். மலமோ, மாநிலமோ எது பந்த் செய்தாலும் கஷ்டம்தான். சாப்பிட்டபின் என்ன ஆகிறது என்று அறிந்துகொண்டாலே மலச்சிக்கலைப் புரிந்துகொள்ள முடியும் என்பது என் Gut Feeling! ஹைவேயில் 130கிமீ வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டு போகும்போது நடுவில் சுங்கச்சாவடி வரிசை. பிரேக் போட்டு நின்றுவிடுகிறீர்கள். முன்பு இருக்கும் வண்டிக்கு ஏதோ பிரச்சினை. ஸ்டார்ட் ஆகாமல் நிற்க, பின்னாலே பெரிய வரிசை. முன் பின் நகர முடியாமல் இருக்கும் கார் போல சிக்கலில் மலம் மாட்டிக்கொண்டால்? மலச்சிக்கல்! வாய் முதல் ஆசனவாய் சுமார் இருபத்தெட்டு அடி நீளமுள்ள ஒரு வழிப் பாதை (குழாய்). இந்த ஹைவேயில் சாப்பாட்டுடன் பயணம் மேற்கொள்ள வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன். பயண நேரம் பதினெட்டு முதல் இருபத்தி நான்கு மணி நேரம். பயணத்தின்போது ஏதாவது (மல)சிக்கல் ஏற்படாமல் இருக்க இயற்கைக் கடவுளை வேண்டிக்கொண்டு பிடித்த உணவை வாயில் போட்டுக்கொண்டு புறப்படுங்கள். முதலில் கண். கண்ணுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். இருக்கிறது....