அலுவலகத்தில் இருந்தேன். என் பத்து வயது மகன் தொலைப்பேசினான். “சுப்பாண்டி காமிக்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடு” என்றான். “இப்ப மீட்டிங்கில் இருக்கேன்... அப்பறம்.” ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் தொலைப்பேசி அழைப்பு. “என்ன ஆர்டர் செஞ்சாச்சா?” “ஃபிளிப் கார்ட்டில் இல்லையே...” ”ஐயோ அப்பா... கூகிளில் சுப்பாண்டி என்று தேடு... அமேசான், ஸ்னாப் டீல்... நிறைய வரும் விலையுடன்... எது சீப்போ அதை வாங்கு...” இந்தச் சம்பவத்துக்கும் ‘பிக் டேட்டா’வுக்கும் தொடர்பு இருக்கிறது. கோயில் கல்வெட்டு பார்த்திருப்பீர்கள். அது ஒரு விதமான தகவல். நம் கணினியில், தாத்தாவின் டைரியில் இருப்பது எல்லாம் தகவல்களே. உதாரணத்துக்கு உங்கள் தாத்தாவின் டைரியில் நான்கு என்ற குறிப்பைப் பார்க்கிறீர்கள். அது வெறும் எண். அது தகவல் ஆகாது. ஆனால் அதே தகவலுக்கு முன் வேஷ்டி என்று இருந்தால், அது சலவைக் கணக்கு என்று சுலபமாகப் புரிந்துவிடும். டைரியை மேலும் திருப்பினால் மீண்டும் நான்கு வேஷ்டி என்று வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் மாதம், தேதி, கிழமையைப் பாருங்கள். அதிலிருந்து எதாவது தகவல் கிடைக்கலாம். உதாரணமாக உங்கள் தாத்தா மா...