Skip to main content

Posts

Showing posts from September, 2016

எம்.எஸ்.சுப்புலஷ்மி - 100

எம்.எஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது ”குறையொன்றுமில்லை”, ”வேங்கடேச சுப்ரபாதம்”, ”அன்னமாச்சாரியா கீர்த்தனைகள்”, ”மீரா பஜன்” என்று சொல்லிக்கொண்டே போகலாம். மற்றவர்களிடம் ( எல்லோரையும் சொல்லவில்லை) இந்த மாதிரி உருப்படியான உருப்படி எதுவும் இல்லை. திருமணம் ஆன புதிதில் என் மனைவி எனக்கு அவர் பாடிய ”சூர்தாஸ் பஜன்களை” அறிமுகம் செய்து வைத்தார். இன்று வரை இதற்கு இணையாக நான் எதையும் கேட்டதில்லை. ( உதாரணத்துக்கு இதைக் கேட்டுப்பாருங்கள் https://mio.to/album/MS.+Subbulakshmi/Surdas+Bhajans  ) சங்கீதம் ரசிக்க முதலில் சாரீரம் நன்றாக இருக்க வேண்டும். உச்சரிப்பு ஒழுங்காக, குரல் பிசிறு தட்டாமல் தேவை இல்லாமல் மேல் ஸ்தாயிக்குப் போய் எவரஸ்டை தொட்ட எடுமண்டு இல்லரியுடன் எல்லாம் போட்டி போடக் கூடாது.  திறமை காட்டுகிறோம் பேர்வழி என்று வேர்த்துக்கொட்டிக்கொண்டு ஸ்வரங்களுடன் ஜிம்னாஸ்டிக் வேலைக் கூடாது. இவை எல்லாம் செய்தால் பாவம் என்ற முக்கியமான விஷயம் காணாமல் போய்விடும். இன்று பாடும் பல கலைஞர்கள் ( சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை ) பாவம் என்ற ஒன்று மிஸ்ஸிங். அப்படியே இருந்தாலும் செயற்கையாக இருக்கிறது அல...