வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு வாகை கூட்டத்தில் எனது சிறுகதை தொகுப்பு வெளியீடு. இடம் கப்பன் பூங்கா ( ப்ரஸ் க்ளப் எதிரில் ) வெளியிட நேசமிகு ராஜகுமாரன் சென்னையிலிருந்து வருகிறார். இவரிடம் நான் மூன்று முறை பேசியிருப்பேன், பார்த்ததில்லை. பெற்றுக் கொள்ள இரா.வினோத் வருகிறார். இவரை பார்த்ததில்லை, பேசியதில்லை. இந்த மாதிரி கூட்டங்களில் நல்ல நண்பர்கள் கிடைக்கிறார்கள். நீங்களும் கலந்துக்கொண்டால் சந்தோஷப்படுவேன். - சுஜாதா தேசிகன்