Skip to main content

வெளியே இருப்பவர்கள்


இன்று காலை எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டு இருந்த போது நண்பர் ஒருவர் ஜெயமோகன் எழுதியிருக்கும் 'உள்ளே இருப்பவர்கள்' என்ற பதிவை எனக்கு அனுப்பியிருந்தார். படித்தேன்.

ஒரு முறை சுஜாதாவை அவர் இல்லத்தில் சந்தித்த போது விஷ்ணுபுரம் பற்றி பேச்சு வந்தது. (புத்தகத்தை ஜெயமோகனுக்கு திரும்பி அனுப்பிய சமயம் என்று நினைக்கிறேன்). அவரேதான் ஆரம்பித்தார். ஆனால் அவர் சொன்ன விஷயமும் ஜெயமோகன் குறிப்பிடும் சில விஷயங்களும் மிகுந்த முரண்பாடாக உள்ளன. அதைப் பற்றி நான் இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. சுஜாதா என்ன சொன்னார் என்றும் நான் சொல்லப்போவதில்லை.

ஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு முறை ஸ்ரீராமானுஜர் குருவுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். குருவின் தலையில் இதமாக தேய்த்துக்கொண்டு இருந்த சமயம், குரு யாதவப் பிரகாசர் சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்ற வாக்கியத்துக்குப் பொருள் சொல்லலானார். கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்றால் அதன் பின்பகுதி. ஆகவே பகவானுடைய கமலக் கண்கள் குரங்கின் பின்பகுதியை போல சிவந்து இருந்தன என்று விபரீதமாக அர்த்தம் சொன்னார். இதை கேட்டதும் ஸ்ரீராமானுஜர் கண்களிலிருந்து நீர் பெருக அவற்றில் சில துளிகள் யாதவப் பிரகாசர் தொடையில் பட, யாதவ பிரகாசர் ஏன் என்று கேட்க, அதற்கு ஸ்ரீராமானுஜர், "இதற்கு இப்படி அர்த்தம் செய்யக் கூடாது; சூரியனின் கதிர்களால் ஆஸம்- மலரச் செய்யப்பட்ட புண்டரீகம் தாமரை மலர்; அந்த மலரைப் போன்ற கண்களை உடையவன்" என்று பொருள் என்றாராம்.

இந்த நிகழ்ச்சி பெருமாள் மீது ஸ்ரீராமானுஜர் வைத்த பிரேமை/பக்தியை காட்ட.

ஸ்ரீவைஷ்ணவனுக்கு பெருமாளை விட, ஆசாரியன் மிக முக்கியம். பாகவத அபசாரம் என்பது பெரிய - மிகப்பெரிய பாவம். நம்மாழ்வார் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானவர். ஆசார்ய குருபரம்பரை வரிசையில், பெருமாள், பிராட்டி, விஷ்வக்ஸேனருக்குப் பின் பூலோக ஆசார்யர்களில் முதலிடத்தில் இருப்பவர். ஸ்ரீவைஷ்ணவத்துக்கே இவர்தான் ஃபவுண்டேஷன். சுஜாதாவின் மன உளைச்சலுக்குக் காரணமில்லாமல் இல்லை.

வெளியே இருப்பவர்களுக்கு அது புரியப்போவதில்லை.

- * - * -


சுஜாதா 90களில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தர வேண்டும் என்று நினைக்கிறேன்.

பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் "இந்தியா நூறு வருஷத்துக்கு முன்" என்கிற மறுபதிப்பு புத்ததகம் இருக்கிறது. டபிள்யூ உர்விக் ( W.Urwick ) என்னும் பாதிரியார் எழுதியது. ஸ்ரீரங்கம், திருவானைக்கா, திருச்சி, சிதம்பரம், மாகாபலிபுரம் போன்ற இடங்களில் நூறு வருஷத்துக்கு முந்தைய தோற்றத்தின் வர்ணனை கிடைக்கிறது. சில அரிய வுட்கட் போன்ற படங்களும் பிரமிக்க வைக்கின்றன. ஸ்ரீரங்கம் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் சேஷராயர் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் வர்ணித்துவிட்டு வேல்ஸ் இளவரசர் 1875-இல் இந்தியா விஜயத்தின் போது இங்கு வந்திருந்து கோபுரத்தின் மேல் ஏறினதையும் ஐந்நூறு ரூபாய் கோவிலுக்கு அளித்ததையும் சொல்லியிருக்கிறார்.
அதன் பின் வருகிறது ஓர் அதிர்ச்சி. "கோயிலின் பிரம்மாண்டமும் பெருமையும் அதன் பிரகாரங்களின் விஸ்தாரமும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் திறமையும் வருஷக் கணக்கான உழைப்பையும் காட்டும் போது இதற்கு ஏறுமாறாக உள்ளே ஒளியிழந்த இருட்டில் எண்ணெய் வழியும் அச்சம் தரும் பிம்பம் மிக வினோதமாக நம்மை தாக்குகிறது. வெறுக்கத்தக்க மோசமான உருவவழி பாட்டுக்கு உலகிலேயே விஸ்தாரமான ஒருகோயில் அமைப்பு எழுப்ப்ப பட்டுள்ளது.

லண்டனில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள் எத்தனை தப்பாக விபரீதமாக நம் முறைகளையும் விக்கிரக வழிபாட்டையும் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு சரியான சாட்சி.

லேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களோ மத இயலாளர்களோ ஒரு பொழுதும் நம் திருத்தலங்களின் வழிமுறைகளை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு விளக்கிச் சொல்லுவது விரயம் எப்படி நம்மால் அவர்கள் 'ஓப்பெரா' சங்கீதத்தை ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ள முடியாதோ அதே போல்.

"நந்தா விளக்கே அளத்தற்கரியாய் நர நாராயணனே கருமுகில் போல் எந்தாய்" என்று திருமங்கையாழ்வார் திருநாங்கூரின் கருவறையின் இருட்டில் பாடியதின் உருக்கத்தை எப்படி பாதிரியார்களுக்கு விளக்க முடியும் ? நம் வழிபாடு வெளிப்புற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது என்பது மத மாற்ற அவசரத்தில் இருந்தவர்களுக்கு புரிந்ததே இல்லை.

Comments

  1. ஜெ.மோ மிகத் தெளிவாக எழுதிய பின்னரும், தொடர்ந்து புண்பட்டே தீர்வோம் என்று அடம் பிடித்தால் எப்படி. சொல்ல போனால், "அத்தை தின்று, அங்கே கிடக்கும் " என்ற பதில் நல்ல பகடிக்கும், கற்பனைக்கும் தளங்களை உள்ளடக்கியதே. ஆனால் எனக்கு இதில் புரியாத விஷயம், சுஜாதா ஏன் புண்பட வேண்டும் என்பதே. அவர் வைணவர்களின், சரணாகதியை ஏற்று கொண்டவராக எனக்கு நினைவில்லை. நாத்திகத்தை முன் வைத்து, இறுதி வரை குழம்பி கொண்டிருந்தவர், எதற்கு, இதற்கு புண்பட வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. இவர் எங்கே நாத்திகத்தை முன்வைத்துக் குழம்பினார்? அல்லது எதனால் நீங்கள் அவ்வாறு முடிவுக்கு வந்தீர்கள்?

      Delete
  2. What Jeyamohan wrote about NammAzhvAr is a shame and his justifications are sham. It is easy, beneficial, and give a lot of literary mileage to vilify nammAzhvAr. That portion, like many other portions of that novel, has no literary rendering, and it is clearly not written with humorous intentions. It stands only as a vilification, but he is cunning enough to insert it to avoid being branded as pro-brahmin writer. In Tamilnadu it is an anathema.

    For hims Jebus is always a personification of kindness and love that puts those who differ into eternal damnation in the netherworld. Muhammad ? Why would he write about it and be damned in this world itself. After all, freedom of speech and courage of literature is always defined as adhering to the definitions given in the Survival syllabus.

    He is certainly far more honest than any other writers in Tamilnadu. However, his honesty does not go beyond what is convenient to him. While the others have idealogical hatred, his is always a calculated attack on the weakest sections to gain benefits.

    He does have a lot of humour sense, and his writing about the actor Sivaji is one sample. That sense humour invited wrath of the Thevar caste people in the cinema industry, and he had apologized to Thevar community representatives in the cinima industry for that humorous peace while the honour of being the literary gian went for eating humble pie. Until today, he has never talked about the casteism behind those attacks, but he will talk about and write about those weakest sections that do not benefit him in any way.

    It does not mean that he is accepting that violence, but he has to keep silent about the actual people causing oppression. As Chanakya once said, honest people cannot survive and he knows it well.

    ReplyDelete
  3. சிந்தனையின் உச்சம் நிந்தனையோ... தூற்ற தூற்ற வாத்தியார் புகழ் கூடத்தான் செய்யும்...
    வாழ்க ஜெ.மோ....மிச்ச மீதியையும் எடுத்து தூற்றுங்கள் ஜெ.மோ......

    ReplyDelete
  4. சரணாகதியை ஏற்று கொண்டவராக எனக்கு நினைவில்லை. நாத்திகத்தை முன் வைத்து, இறுதி வரை குழம்பி கொண்டிருந்தவர், எதற்கு, இதற்கு புண்பட வேண்டும்?///

    Even I agree with this statement but I want answer from desikan as he know very well abt sujathas inner feelings

    ReplyDelete

Post a Comment