பயணம் முடிந்து, நினைவுகள் வாடாமல் இருக்கும்போதே அதைப் பற்றி எழுதிவிடுவது நல்லது. சில சமயம் முடிவதில்லை. சமீபத்தில் எதையோ தேடும் போது, 2009 டிசம்பர் 27 காலை சுமார் 10 மணிக்குமேல் நான் திருக்கோட்டியூர் சென்றதற்கு அத்தாட்சியாக நான்கு ரூபாய் திருப்பத்தூர் பேருந்து சீட்டு கிடைத்தது. திருக்கோட்டியூர் பயணத்தை அதிலிருந்து ஆரம்பிக்கிறேன்.