17.11.2006 அன்று எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்... (ஒலிப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து) "நடு ராத்திரி ஒருத்தர் வந்து கதவை தட்டி ஒரு கதையை கொடுத்து இதில என்ன தப்பு சொல்லுங்க... நீங்க எழுதற குப்பைய எல்லாம் போடறாங்க.. எவ்வளவோ முறை நான் எழுதி திரும்ப வந்துவிட்டது" என்றார். அந்தக் கதையைப் படித்த போது, அது ஒரு காலேஜ் காதல் கதை. "எந்த காலேஜ்?" என்று கேட்டேன். ஏதோ பேர் சொன்னான். "சரி அந்த காலேஜுல நுழையும் போது, என்ன இருக்கும்?" "என்ன... உள்ளே போகும் போது மரங்கள் எல்லாம் இருக்கும்" "சரி அந்த மரத்துக்கு பேர் என்ன ?" "அதெல்லாம் தெரியணுமுங்களா ?" "ஏம்பா, நீ தினமும் ஒரு காலேஜ் போற. அந்த மரத்தை எப்பவாவது நிமிர்ந்து பார்த்திருக்கியா? என்ன மரம்னு கூட சொல்ல முடியலை. அந்த Detail இல்லைன்னா நீ எப்படி எழுத்தாளன் ஆறது?" "ஏங்க நீங்க கூட நிறைய கொலை கதை எழுதியிருக்கீங்க. நீங்க என்ன கொலையா செய்திருக்கீங்க?" என்றார். என்னால பதிலே சொல்ல முடியலை.