[%image(20090824-life.jpg|225|200|Life)%] உயிர் என்பது என்ன என்று பல முறை வியந்திருக்கிறேன். எவ்வளவுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தாலும், பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்டாலும். உயிர் என்றால் என்ன என்று வரும் கடைசிக் கேள்விக்கு விடை கிடையாது. கடவுளை நேரில் பார்த்திருக்கிறீர்களா? என்ற பகுத்தறிவாளர்கள் கேட்கும் கேள்விக்கும், உயிருக்கு தேவையான ப்ரோட்டீன்கள், அமினோ அமிலங்கள் மற்றும் உங்களுக்குத் தேவையானவைகளை எடுத்துக்கொண்டு உயிரை உற்பத்தி செய்யுங்கள் என்று ஒரு விஞ்ஞானியிடம் கேட்கும் கேள்விக்கும் ஒரே பதில் முழிப்பதுதான். கடைசிக் கேள்விக்கு கடவுள் தேவைப்படுகிறார். எவ்வளவு தான் முன்னேறினாலும் செயற்கைகோள் அனுப்பும் முன்பு திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் இதனால்தான் செய்யப்படுகிறது!. fநம் உடலில் உயிர் என்பது என்ன என்றால் அதற்குச் சரியான விடை தெரியாது. என்னதான் கீதையையும், பிரம்மசூத்திரத்தையும் படித்து ஆத்மா, சரீரம் என்று கரைத்துக் குடித்தாலும் உயிர் மீது பற்றும் அதனால் பயமும் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு நீச்சல் குள பயம், மாடியிலிருந்து கீழே பார்த்தால் வரும் ஒரு விதமான பயம் இரண்டும...