ஏழாம் வகுப்பு படிக்கும் போது, " Water the elixir of life " என்று ஆங்கில கட்டுரை பாடம் ஒன்று இருந்தது. அதில் தான் Elixir என்ற வார்த்தை எனக்கு முதல் முதலில் அறிமுகம். தமிழ் சொல் 'அமுது'. ' Ambrosia ' என்ற சொல் இன்னும் சரியாகப் பொருந்தும். அமுதை தேவர்களின் உணவு என்பர். திருமால் திருப்பாற்கடலைக் கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது என்பது புராணம். அமுதம் என்பது எப்படி இருக்கும் என்று தெரியாவிட்டாலும், நன்கு பசிக்கும்போது, மனைவி சமைத்த உணவையே "தேவாமிருதம்" என்று சொல்கிறோம். ஸ்ரீவைஷ்ணவர்கள் பாயசத்தை திருக்கண்ணலமுது என்றும் ரசத்தை சாற்றமது என்றும் குழம்பை நெகிழ்கறியமுது என்றும் சொல்வார்கள். அமுதன் என்றால் கடவுள் என்ற பொருள். ஆங்கிலத்தில் immortal - அழிவில்லாத என்று சொல்லலாம். ஆழ்வார்கள் அமுதை உவமையாக்கி நமக்கு அமுதாக நிறைய அருளிச் செய்துள்ளார்கள். அவற்றுள் சில கும்பகோணம் ஆராவமுதாழ்வார் பற்றி நம்மாழ்வார் பாடிய பாடல் பிரசித்தம். (என் அப்பாவிற்கு ரொம்பப் பிடித்த பாடல் கூட). " ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே " என்ற பாடலில் நம்மாழ்வார் பெருமா...