வேதாளம் அவசரமாக வந்து ஒரு படத்தை விக்கிரமாதித்தனுக்கு தந்தது. "இது என்ன படம் ?" "இதுவா ? இது ஒரு விதமான புதிர்" "குழந்தைத்தனமா இருக்கு?" "ஆமாம். இது குழந்தைகளுக்கான புதிர் தான். இதில் நிறைய மிருகங்கள் பெயர் இருக்கிறது. அதை கண்டுபிடி பார்க்கலாம்" "விக்கிரமாதித்தன் ஒரு பென்சிலை எடுத்துக்கொண்டு தேட ஆரம்பித்தான்" "இரு, செஸ் போர்டில் ராஜா எப்படி நகரும்?" "ஒவ்வொரு கட்டமாக" "அதே போல நகர்ந்து பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு 75, 65, 56 கட்டங்களை கடந்தால் வரும் மிருகத்தின் பெயர் - 'DOG'. அதேபோல் 33, 43, 35, 45, 54, 63, 62, 70 & 71 கடந்தால் 'PORCUIPINE' வரும். சரி மத்த மிருகங்களின் பெயர்களை கண்டுபிடி" என்று வேதாளம் அவசரமாக எங்கோ போனது. [%popup(20070316-animalpuzzle.jpg|446|289|குட்டீஸ் புதிர்)%] விக்கிரமாதித்தன் யோசிக்க ஆரம்பித்தான். நீங்களும் விக்கிரமாதித்தனுக்கு உதவலாம்...