Skip to main content

Posts

Showing posts from February, 2007

வேதாள உலகம்

இந்த முறை வேதாளம் வித்தியாசமாக வந்திருக்கிறது. ஆமாம், நீங்களும் வேதாளத்துடன் பயணம் செய்ய இருக்கிறீர்கள். ஜாக்கிரதை. இது மாயச் சுழல், விடை தெரிந்தால் தான் அடுத்த லெவலுக்குப் போக முடியும். உங்களுக்கு கடைசி வாய்ப்பு. சீக்கிரம் கிளம்புங்க. இப்போதே நீங்கள் மற்ற உபயோகமான வலைப்பதிவைப் படிக்க போகலாம். சரி 1, 2, 3 எண்ணுகிறேன்,  அதற்குள் கிளம்பிவிடுங்கள்.  1, 2, 3,...  என்ன இன்னுமா இருக்கிறீர்கள். பிறகு உங்க இஷ்டம், நான் என்ன செய்ய முடியும்?  ஆல் தி பெஸ்ட்!! [ விடைகளை கொடுக்க வேண்டிய வழிமுறைகள் - If the answer is a word, give it in english -lowercase. If it is a fraction, give it with a 0 before the decimal point eg., .1 is wrong, give it as 0.1 ]

திருமழிசையாழ்வார்

[%image(20070204-thirumazhisai1.jpg|167|242|Thirumazisai)%] நேற்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம். முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தே, உடன் வாழ்ந்த ஆழ்வார் திருமழிசையாழ்வார். தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். (கடலுக்கு மேற்கில் காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள ஊர்.) ("தொண்டை நன்னாடு சான்றோருடைத்து" என்கிறார் ஒளவையார்.) இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது.  தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார். திருமாலின் அடியவராகத் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும், திருமழிசை என்ற திருத்தலத்தில் பெருமானின் சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார். கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்பு பிரம்பு அறுக்கும் தொழில் செய்யும் திருவாளன், அவரது மனைவி பங்கயச் செல்வி என்பவர்களால் வளர்க்கப் பெற்றதாக குருபரம்பரை கூறுகிறது. இவர் திருமழிசையில் பிறந்ததால் திருமழிசையாழ்வார் என்...

பதம் பிரித்த பிரபந்தம்

போன வாரம் எழுத்தாளர் சுஜாதாவை பார்த்த போது, செல்போனுக்கும் டைரிக்கும் நடுவில் ஒரு புத்தகத்தை இருப்பதை கவனித்தேன். என்ன என்று வாங்கிப் பார்த்த போது அது - "நாலாயிர திவ்யப் பிரபந்தம்". வெளியிட்டவர்கள் தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை. ( இரண்டு பாகங்கள் விலை 225/= ). இந்த புத்தகத்தின் சிறப்பு - எளிதில் படிக்க உதவும் வகையில் பாசுரங்கள் பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட புத்தகத்தை திரும்பவும் வெளியிட்டுள்ளார்கள். ( உபயம்: கடுகு அல்லது அகஸ்தியன் என்றழக்கப்படும் ரங்கநாதன்). பதிப்பாசிரியர்கள்: எழுத்தாளர்கள் 'சுபா'. பிரபந்தம் மீது பிரேமை கொண்டவர்கள் வைத்திருக்க வேண்டிய பதிப்பு. சிறப்பு பிகு: தென்கலை, வடகலை இரண்டு திருமண், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் தனியன்கள் அடங்கிய முதல் பிரபந்த புத்தகம் இது :-) இந்த வாரம் கல்கியில் சுஜாதா எழுதிய பகுதி கிழே தந்துள்ளேன். கிடைக்குமிடம் : 37, Canal Bank Road, Kasturaba Nagar, Adyar, Chennai 600 020 Phone: 044-2441 4441, 94446 59779      ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக் கொள்ள ...