போன வாரம் புதன் கிழமை அலுவலகத்தில் ஒரு மீட்டிங் முடித்துவிட்டு வெளியே வந்த போது, நூறு பேர் இருக்கும் இடத்தில் என்னையும் சேர்த்து ஒரு நான்கு பேர் தான் இருந்தார்கள். [%image(20060420-bangalore_violence.jpg|100|142|Violence)%] விசாரித்ததில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று எல்லோரையும் வீட்டிற்குப் போகச் சொல்லி ஈ-மெயில் வந்துள்ளது என்றார்கள். நானும் கிளம்பினேன். வரும் வழியில் நடு ரோட்டில் டயர் எரிந்துகொண்டிருந்தது. சில பஸ், கார்களில் கண்ணாடிகளைக் காப்பாற்றிக் கொள்ள ராஜ்குமார் ஸிராக்ஸ் படங்கள் முன்பும் பின்பும் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டு வேகமாகப் போய்கொண்டிருந்தன. சுமார் இரண்டு கீமீ தூரத்துக்கு வாகன நெரிசல்... பயந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்து டிவியைப் போட்டேன். அதில் ராஜ்குமார் இறந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் காலையிலிருந்தே எங்கும் வன்முறை, பதட்டம் என்று டிவியில் சோக இசையில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு கன்னட சேனல்கள், இரண்டு செய்தி சேனல்கள் தவிர மற்றவைகளில் எல்லாம் பூச்சிகள் தான் தெரிந்தது. டிவியில் பார்த்த வன்முறை செய்பவர்கள் 15-25 ...