இந்த வாரம் நான் படித்த இரண்டு பகுதிகளை கொடுக்கலாம் என்று இருக்கிறேன். முதலில் கல்கி எழுதியது ( - ‘படித்தேன்... ரசித்தேன்...’ நூலிலிருந்து... வானதி பதிப்பகம் ) ஒருவன் நம்பத்தகாத நிகழ்ச்சி எதையேனும் கூறினால், ‘‘என்னப்பா கதை சொல்லுகிறாயே?’’ என்கிறோம். ‘‘இதென்ன கதையா இருக்கிறதே’’, ‘‘என்னடா, கதை அளக்கிறாய்?’’ என்றெல்லாம் அடிக்கடி காதில் விழக் கேட்டிருக்கிறோம். இவற்றிலிருந்து, கதை என்றால் எளிதில் நம்ப முடியாத அபூர்வமான நிகழ்ச்சிகளடங்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. அதே சமயத்தில், கதைகளைப் பற்றி விமர்சனம் எழுதும் பொல்லாத மனிதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கதையில் வரும் ஒவ்வொரு சம்பவமும் வாழ்க்கையில் நடைபெறக் கூடியதாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். ‘‘அது அப்படி நடந்திருக்க முடியாது.’’ ‘‘இது இவ்வாறு ஒரு நாளும் நடந்திராது.’’ ‘‘இந்தச் சம்பவம் இயற்கையோடு பொருந்தியதில்லை.’’ ‘‘அந்த நிகழ்ச்சி நம்பக் கூடியதன...