Skip to main content

Posts

Showing posts from January, 2005

பெண்களூர்-0 3

பெங்களூர் பற்றி இன்னும் கொஞ்சம்.... * அவரிடம் GSM மொபைல், WLL தொலைபேசி இருக்கிறது. இவர் சாஃப்ட்வேர் என்ஜினியர் கிடையாது - ஒரு ஆட்டோ டிரைவர். ஆட்டோவில் இவற்றை தவிர பத்திரிக்கைகள், செய்தித்தாள், டிஜிடல் போர்டில் ரயில்வே நேரம், முக்கிய செய்திகள்..என்று ஓடிக்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிக்கும் மேல் பண்பாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்கிறார். இவர்களால் பெங்களூர் மேலும் சுவாரசியமாகிறது.... நம்பவில்லை என்றால் பார்க்க படம். [gallery link="file"] * பெங்களூரில் ஒரு நாள் காலை எழு மணிக்கு ஹோட்டலில் பொங்கல் ஆர்டர் செய்தேன். வெயிட்டர் பொங்கல் கொண்டுவந்தார். பொங்கல் ஒரே தண்ணியாக இருந்தது. எனக்கு சந்தேகம். வெயிட்டரை கூப்பிட்டு ஏன் ஒரே தண்ணீராக இருக்கிறது என்று கேட்டேன். இது பெங்களூர் பொங்கல் என்றார். பசி சாப்பிட்டேன், ஸாரி குடித்தேன். பிறகு எனக்கு தெரிந்த நண்பரிடம் இதை எப்படி செய்வது என்று கேட்டேன். ரொம்ப சிம்பிள் என்று ரெஸிபி கொடுத்தார். இது இங்கே.. தமிழ் நாட்டு பொங்கல் செய்யவும். அதில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். அவ்வளவுதான். இப்போது தான் தெரிந்தது ஏன் தமிழ் நாட்டுக்கு தண்ணீர்...