வாசகர்கள் கேட்ட விஞ்ஞான சிறுகதை கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது. கேள்வி கேட்ட அனைவருக்கும், பதில் அளித்த திரு.சுஜாதாவிற்கும் என் மனமார்ந்த நன்றி. கேள்வி-பதில்களை தொகுக்க உதவிய என் நண்பர் பாலாஜிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. கேள்வி : 1. விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன ? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா ? நீங்கள் எழுதிய 'முடிவு' என்ற சிறுகதையை விஞ்ஞானச் சிறுகதை என்று வகைப்படுத்தியது எந்த அடிப்படையில் என்பதை கொஞ்சம் சிம்பிளாக விளக்குங்களேன் ? "epistolary literary technique"' (different style of writing) ' சார்ந்திருப்பதால் முடிவு ஒரு sci-fi கதை என்கிறீர்களா? பதில்: விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன என்பதைப் பற்றி பக்கம் பக்கமாக எனது தொகுதியின் முன்னுரையில் எழுதியுள்ளேன். அதைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள். இல்லை net-ல் தேடிப்பாருங்கள். நிறைய விளக்கம் கிடைக்கும். ' முடிவு' என்கிற கதை முழுவதும் நானே எழுதியது. அதன் வடிவமைப்பில் முன்று பேர் எழுதிய கடிதங்கள் என்பதை நம்ப வைக்க செய்த தந்திரங்கள் ஒரு விஞ்ஞானக் கதைக்குரியது. இந்தக் கத...