Skip to main content

Posts

Showing posts from June, 2016

மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்

மணவாள மாமுனிகள் திருவஹிந்திரபுரம் இந்த ஆனி மூலம் என் கைக்கு ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யான புத்தகம் புத்தகம் கிடைத்தது. அன்று தான் "ஸ்ரீசைலேச தயாபாத்ரம்" அவதார தினம். சில ஆண்டுகளுக்கு முன்  திருவஹிந்திரபுரத்துக்கு முதல் முறை சென்றிருந்தேன். தேவநாதப் பெருமாள், ஸ்வாமி தேசிகன் அவர் அங்கே தன் கையாலேயே வெட்டிய அழகான கிணறு என்று எல்லாவற்றையும் சேவித்துவிட்டு வரும் போது வடக்கு மாட வீதியில் மணவாள மாமுனிகள் சந்நதியை பார்த்தவுடன் அவரையும் சேவித்துவிட்டு வந்துவிடலாம் என்று உள்ளே சென்றேன். அதுவரை எங்கள் கூடவே வந்த ஒரு உறவினர் ( அந்த ஊர்க்காரர் தான் ) இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை “நீங்க உள்ளே சென்று சேவித்துவிட்டு வாங்க... அடியேன் இங்கேயே இருக்கிறேன்” என்றார். எனக்குப் புரியவில்லை. சந்நதியின் உள்ளே மணவாள மாமுனிகளைக் காணவில்லை ஆனால் மினியேச்சர் சைசில் பார்த்தசாரதி பெருமாள் இருந்தார் !

நான் இராமானுசன் புத்தகத்தை முன் வைத்து..

நண்பர் Amaruvi Devanathan ஆமருவி தேவநாதன் எழுதிய ’நான் இராமானுசன்’ என்ற புத்தகம் பற்றி தொடர்ந்து இரண்டு வரி முகநூல் டீசர் மூலம் புத்தகம் எதைப்பற்றியது என்று ஒருவாறு தெரிந்தாலும் அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்துக்கொண்டே இருந்தது. உடையவர் திருநட்சத்திரம் அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு வாங்கி சில நாள் முன் தான் படித்து முடிக்க முடிந்தது. பிரமம் என்ன ? அதை எப்படி அணுக வேண்டும் என்ற கேள்விகள் பல நூற்றாண்டுகளாக இருந்துக்கொண்டே இருக்கிறது. ஆதிசங்கரர் தொடங்கி இராமானுசர் வரை அதை எப்படி அணுக வேண்டும் என்று தர்க்க ரீதியான காரணங்களையும்(logical reasoning) கொண்டு ஆராய்ந்துள்ளார்கள். பிரம்ம சூத்திரத்தில், சூத்திரம் ஒன்றாக இருந்தாலும், இருவரும் எழுதிய உரையில் வேறுபாடுகள் இருக்கிறது. இதுவே அத்வைத்தம், விசிஷ்டாத்வைதம் என்ற சித்தாந்தமாக இன்றும் நிலவிவருகிறது. ’இதுவே உண்மையான பகுத்தறிவு. நான் இராமானுசன்’, என்ற புத்தகத்தில் உடையவரே இந்த தத்துவங்களுக்கு விளக்கங்கள் அளிப்பது மாதிரி எழுதியிருக்கிறார் ஆமருவி தேவநாதன். பாராட்டுக்கள். "இராமானுசனும், உறங்கா

ஸ்ரீ மணக்கால் நம்பியும், ஸ்ரீ மடப்பள்ளியும்

இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் ஸ்ரீரங்க விஜயம். பெரிய பெருமாளை சேவிக்க ரூ250/= க்யூவே பெரிதாக இருக்க, ’அப்பால’ இருக்கும் இன்னொரு ரங்கநாதப் பெருமாளாகிய அப்பக்குடத்தானை செவிக்க வண்டியைத் திருப்பினேன். தன் வலது கையில் அப்பக்குடத்தை வைத்திருக்கும் இந்தப் பெருமாளுக்கும் எனக்கும் ரகசிய சம்பந்தம் ஒன்று உண்டு. சொல்கிறேன். கோயிலடி என்னும் அப்பகுடத்தான் பல வருஷம் முன் ஒரு நாள் கொள்ளிடக்கரை கல்லணை வழியாக கோயிலடி என்று அழைக்கப்படும் அப்பகுடத்தானை சேவிக்கச் சென்றேன். சந்நிதி பூட்டியிருந்தது. விசாரித்ததில் அர்ச்சகர் வீட்டைக் காண்பித்தார்கள். அர்ச்சகரிடம் பெருமாளை சேவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். அவரும் அதற்குச் செவிசாய்த்து சந்நிதியின் கதவை திறந்தார். ஆனால் அகத்தில் எதையோ மறந்துவிட்டார். இதோ வந்துவிடுகிறேன் என்று சென்றார். கியூரியாசிட்டியினால் ஒரு  காரியம் செய்தேன் ( கவனிக்கவும் - விவரம் தெரியாத சின்ன பையனாக இருந்த போது ) கருவரை உள்ளே சென்று பெருமாள் பக்கம் இருக்கும் அப்பகுடத்தையும் பெருமாளையும் தொட்டு சேவித்துவிட்டு வெளியே வந்தேன். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்த அர்ச்சகர் “நம்

இராமானுசனுடையார் - இசையுடன் ஆழ்வார் பாசுரங்கள்.

ஸ்ரீராமபாரதியின் ’தேவகானம்’ என்னும் ஒலி நாடா தொகுப்பு என் திருதகப்பனாரின் சஷ்டியப்தபூர்த்திக்கு பரிசாகக் கிடைத்தது. அப்போது திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஒலிநாடாக்களை வீட்டில் ஓட விட்ட போது ஆசாரியர்களின் தனியன்களும், ஆழ்வார் பாசுரங்களையும் முதல் முதலாக ராகத்துடன் கேட்டு அனுபவித்தேன். அது ஓர் ஆத்தும அனுபவம் விவரிக்க இயலாது. பிறகு அந்த ஒலி நாடா கொடுத்தவரை தேடி திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டென். நாதமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை நுட்பமான தத்துவங்களை ஜனங்கள் கண்ணாரக் கண்டு தெளிவடையும் பொருட்டு பெருமாளுடைய புறப்பாடுகளில் அவைகளைப் பல விதங்களில் ஏற்பாடு செய்ய நினைத்தார். நாதமுனிகள் காலத்தின் ஏற்பாட்டின்படியே உத்ஸவங்கள் நடந்து ஸ்ரீராமானுஜர் காலத்தில் திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் எல்லா திவ்ய தேசங்களிலும் சேவிக்க ( ஓதப்பட ) வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயிலில் எந்தெந்த காலத்தில் எந்தெந்த திவ்யபிரபந்தம் சேவிக்க வேண்டும் என்ற நியதி உண்டாக்கப்பட்டது. அதனால் தான் ஸ்ரீராமானுஜருடைய வாழித்