Monday, August 29, 2005

ஸ்ரீவில்லிப்புத்தூர்

"மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
வில்லிப்புத் தூருறை வான்தன்
பொன்னடி காண்பதோ ராசையி னாலே
பொருகயற் கண்ணிணை துஞ்சா.."


[%image(20050829-srivilliputhur_gopuram.jpg|188|250|ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்)%]

என்று ஆண்டாள் பாடியுள்ள ஸ்ரீவல்லிப்புத்தூருக்கு கோகுலாஷ்டமி அன்று சென்றிருந்தேன்.


திருச்சி மதுரை பைபாஸ் சாலை வழியே 1066 டயல் செய்தால் ஆம்புலன்ஸ் உடனே வரும் என்ற அறிவுப்புக்களை பார்த்துக்கொண்டு 80 கிமி வேகத்தில் சென்றால் மூன்று மணி நேரம் ஆகிறது.


இந்த கோயில் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி வடபத்ரசயனர் கோயில். இந்த பெருமாளுக்கு தான் ஆண்டாள் தன் மாலையை சூடிகொடுத்தாள் என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன. இதன் நுழைவுவாயில் இருக்கும் இராஜகோபுரம் 196அடி உயரம்; 11 நிலைகள்; 11 கலசங்களையும் கொண்ட கோபுரத்தின் அகலம் 120' x 82' ஆகும். இந்த கோபுரம் தமிழ்நாடு அரசின் முத்திரைச் சின்னமாக விளங்குகிறது.


[%image(20050829-logo.jpg|85|88|TN logo)%]

இந்த ராஜகோபுரத்தை பெரியாழ்வாரால் ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னன் (கிபி 765-815) உதவியோடு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோபுரத்தின் விமானம் முற்காலப் பாண்டியர் முதல் பிற்காலத்தில் வந்த மதுரை நாயக்கர் வரை திருப்பணி செய்துள்ளதற்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கிறது.


இந்தகோபுரத்தின் உட்பகுதியில் உள்ள கல்வெட்டில் கவிச்சக்கிரவர்த்தி கம்பர் மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக இக்கோபுரத்தை பாடியுள்ளார்.


"இருக்கோத்ய் மந்தணர் சூழ்புதுவாபுரி யெங்கள்பிரான்
மருக்கோதை வாழும் வடபெருங்கோயில் மணிவண்ணனார்,
திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரமென்றே
பருக்கோத லாமன்றி வேறுபமானப் பணிப்பில்லையே.


இன்று எனாமல் பெயிண்ட் அடித்து காணப்படும் வடபத்திர சயனருக்கு ஒரு கலர்புல் ஸ்தல புராணம் இருக்கிறது.


[%image(20050829-vadapathra_sai.jpg|200|146|srivilliputhur perumal)%]

ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது. ஷேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார்.  இதனால் இந்த ஊருக்கு "ஸ்ரீவில்லிப்புத்தூர்" என்று பெயர் வந்தது என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.


இரண்டாம் பகுதி ஆண்டாள் சன்னிதி. இவ்வூரை உருவாக்கிய வில்லியால் கட்டப்பட்டது.


ஆண்டாள் திருக்கோயில் கிபி 15 ஆம் நூற்றாண்டிலிருந்து நாயக்கர் காலம் முடிய கல்வெட்டுக்கள் உள்ளன. இன்றும் இந்த கல்வெட்டுக்களை நாம் பார்க்கலாம். மேலும் மதுரை காலத்து 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமாயண ஓவியங்களும் காணப்படுகிறது. கோயிலின் கல்வெட்டுகளில் சூடிக்கொடுத்த நாச்சியார் கோயில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.


[%image(20050829-srivilliputhoorandal.jpg|129|200|Srivilliputhur Andal with Parrot)%]

இந்த கோயிலில் உற்சவர் ஆண்டாளுக்கு தினமும் மாலையில் கிளி சாற்றப்படுகிறது. கிளி கட்டுவதற்கு தேவையான மரவள்ளி கிழங்கு இலைகள், மாதுளம் பூக்கள் மற்றும் குச்சிகள் நந்தவனத்தில் வளர்க்கப்பட்டு கிளி கட்டும் வம்சாவளியினரால் தினந்தோரும் கட்டப்படுகிறது.


பெரியாழ்வார் கட்டிவைத்த மலர் மாலையைத்தான் அணிந்து கொண்டு ஒப்பனைப்பார்த்த கண்ணாடிக் கிணறு என்று பெயர் பெற்ற சிறு கிணறு ஒன்று பிரகாரத்தில் கண்ணாடி தொப்பி போட்டுக்கொண்டு, இன்று உண்டியலாக மாறி காசு போட்டு அதில் விழுகிறதா என்று எல்லோரும் எட்டிப்பார்கிறார்கள்.


பெரியாழ்வார் அவதார ஸ்தலமாகிய இந்த இடத்தில் அவருக்கும் ஒரு சன்னதி இருக்கிறது. இந்த கோயிலில் மட்டும் தான் பெருமாளுடன் கருடாழ்வார் ஆண்டாளுக்கு பக்கத்தின் நின்றுகொண்டு காட்சியளிக்கிறார்.


[%image(20050829-andal_rajamanar_garuda.jpg|250|164|andal rajamannar garudazvar)%]

கோயிலை விட்டு வெளியே வந்தால் எல்லா கடைகளிலும் ஆண்டாள் ஓவியங்களும் பால்கோவாவும் விற்கிறார்கள்.இன்னும் கொஞ்ச நாளில் பால்கோவா கோயில் பிரசாதம் ஆனாலும் வியப்பதற்கு இல்லை.


வரும் வழியில் யானை மலையை தாண்டியவுடன் குவாலிஸ், ஹோண்டா சிட்டி கார்களுக்கு முன் வந்து தாழம்பூ கொத்து ஐந்து ரூபாய் என்று விற்கும் மூக்கு ஒழுகும் சிறுவர்கள் அவர்களை சுற்றி 'கேப்டன் விஜயகாந்த்' தன் புது கட்சிக்கு போஸ்டர்களில் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

Tuesday, August 23, 2005

சாந்தி சாதனா

இந்த பெயரை பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.
அமரர் எஸ்.இராஜம் அவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன் நிறுவிய நிறுவனம்.
"வரலாற்று முறைத் தழிழ் இலக்கியப் பேரகராதி" என்ற பெயரில் அற்புதமான ஒரு அகராதியை இவர்கள் கொண்டுவந்துள்ளார்கள்.


வரலாற்று முறை அகராதி - Etymological Dictionary -  அதாவது ஒரு சொல்லுக்கு நாம் விருப்பத்துக்கேற்பச் பொருள் காணாமல், இலக்கியத்தில் எந்தெந்த இடத்தில் அச்சொல் வருகிறது, அதற்கு அந்த இடத்தில் என்ன பொருள், அதற்குப் பழைய உரையாசிரியரின் ஆதாரம் உண்டா, காலப் போக்கில் அச் சொல்லின் பொருள் எவ்வாறு மாற்றம் அடைந்து வந்த்துள்ளது என்பவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு விரிவான, முழுமையான,  தரமான ஒர் அகராதி.


மொத்தம் ஐந்து தொகுதிகள், 131 இலக்கியங்கள், 70814 வார்த்தைகள், எல்லாவற்றிருக்கும் மேலாக தழிழ் பேரறிஞர் பலருடைய 40 ஆண்டு கால கடின உழைப்பைக் கொண்டு இது வெளிவந்துள்ளது.


இதற்கு மேல் கொஞ்சம் சீரியஸ் விஷயம்.


தமிழ் அகராதி என்பது காலப் போக்கில் அவசியம் கருதித் தானாக வளர்ந்த ஒன்று. 18ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றே கூறலாம். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் சூத்திர முறையை பின் பற்றி எதுகை மோனை தொடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொற் பொருள் காணும் அளவில் முன்னோடியாக திகழ்ந்தாலும் அகராதி யடிப்படையானதன்று.


தொல்காப்பியர் காலத்துற்கு பிறகு சமய வளர்ச்சிக்காகப் பெளத்தம், சமணம், சைவம், வைணவம் முதலிய சமயங்கள் தத்தம் கொள்கைகளை பரப்ப பற்பல இலக்கியங்களை இயற்றி தமிழ் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போராடின. இச்சமயங்களுக்கு அடிப்படை மொழி சமஸ்கிருதம். இது தமிழ் சொற்களின் எண்ணிக்கையைப் பெருக்கியது. அப்போது தான் அகராதி அல்லது கலைக் களஞ்சியம் வந்தது என்று சொல்லலாம்.


8ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில், சேந்தன் "திவாகரம்" என்ற நிகண்டு நூல் தான் அகராதி கருத்துக்கொண்டு வந்த முதல் நூல். பின்  13 ஆம் நூற்றாண்டில் வந்த 'பிங்கலந்தை' என்ற நிகண்டு, ஏறக்குறைய 14700 சொற்களுக்குப் பொருள் கண்டுள்ளது. இந்நூல் திவாகரர் என்பவரின் புதல்வரான பிங்கலரால் இயற்றப்பெற்றது.


அடுத்து குறிப்பிடத் தக்கது சூடாமணி நிகண்டு. மண்டல புருடரால் விருத்தப்பா என்ற வகையில் இயற்றபெற்ற இந்நூல் கிருஷ்ணராயர் என்ற குறிப்பு வருவதால், இது விஜய நகரப் பேரரசரான கிருஷ்ண தேவராயர் காலத்தையொட்டி 16ஆம் நூற்றாண்டில் (கிபி 1520 )தோன்றியிருக்கூடும் என்று கருதலாம். இந்நூலில் பல புதுச் சொற்கள்(ஏறக்குறைய 11000 சொற்கள்) இடம்பெற்றுள்ளது.


பின்னர் உரிச் சொல் நிகண்டு, கயாதரம், பாரதி தீபம், ஆசிரிய நிகண்டு, பொதிகை நிகண்டு, அபிதானத் தனிச் செய்யுள் நிகண்டு கந்தசாமியம், கைலாச நிகண்டு சூளாமணி, நாம தீப நிகண்டு, தொகை நிகண்டு, பொருட்டொகை நிகண்டு, தொகைப் பெயர் விளக்கம், இலக்கத் திறவு கோல் முதலியன வெளியாயின. இவற்றில் ஒன்றும் தற்போது இல்லை.


இவை எல்லாம் ஆங்கிலத்தில் புதிய அமைப்பான சொற்பொருட் களஞ்சிய அகராதி(Thesaurus)க்கு ஒப்பான அமைப்பு முறை கொண்ட நூல்களேயாகும். காலப்போக்கில், ஒரு சொல்லுக்கு பல பொருளும், ஒரு பொருளுக்குப் பல சொற்களும் காணவேண்டிய நிலையில், இவற்றை அகராதிப் படுத்த வேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டது.


பழைய ஏட்டுப் பிரதிகளில் உள்ள நிகண்டுகள் எல்லாம் அகர வரிசைப் படுத்தப் படாமல், தாம் எடுத்துக் கொண்ட பொருள்வரிசைக் கேற்பவே காணப் படுகின்றன.பிற்பாடு அதை பதிப்பித்தவர்கள் கூடிய வரை அகர வரிசைப் படுத்திப் பதிப்பிக்க முனைந்துள்ளார்கள்.


சூடாமணி நிகண்டு ஞாபகம் வைத்துக்கொண்டு மனப் பாடம் செய்வதற்கேற்ற முறையில் எதுகை நயத்தில் இயற்றப்பெற்றுள்ளது. 'கயாதரம்' நிகண்டு அந்தாதித் தொடையில் அமைந்திருக்கிறது. பின்னர் அரும் பொருள் விளக்க நிகண்டு, வேதகிரியார் நிகண்டு, நானார்த்த தீபிகை முதலியன பல நிகண்டுகள் பல வித முன்னேற்றங்களோடு வெளிவந்தன.


தொடர்ந்து கிபி 1594 இல் சிதம்பர ரேவண சித்தர் இயற்றிய "அகராதி நிகண்டு" அகராதி வரிசையைப் பின் பற்றிய முதல் நிகண்டு ஆகும்.


13 அல்லது, 14 ஆம் நூற்றாண்டில் மணிப் பிரவாள நடையில் காணப் பெறும் கடின சொற்களுக்கு விளக்கம் தரும் வகையில் அகராதி நூல் ஒன்று வந்தது குறிப்பிடதக்கது. இந்நூல் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ளது.


பாதர்பெஸ்கியின் "அகராதி மோனைக் ககராதி யெதுகை" என்ற நூல் புது முயற்சியாய் அமைந்தது. பாட்டுச் சொல்லகராதி என்ற மற்றொன்று ஓரெழுத்து சொல், ஈரெழுத்துச் சொல், மூவெழுத்துச் சொல் என்ற முறைப் படி 10 பிரிவுகளாக அமைந்ததுள்ளது.


தற்போது சொற்பொருள் காணும் கடின முயர்ச்சியும், மனப்பாடஞ் செய்யும் கடின உழைப்பும் மறைந்து போய் அகராதி வரிசையில், வேண்டும்போது சொற்களுக்கு பொருள் தேடும் முயற்ச்சி வளர்ந்து விட்டது. இக் கால கட்டத்தில் அயல் நாட்டினரின் செல்வாக்கும் நுழைய தொடங்கிவிட்டது.


ஐரோப்பிய வணிகர்களைத் தொடர்ந்து இந்நாட்டில் புகுந்த சமய நிறுவனங்களின் காரணமாகத் தமிழ் அகராதி முறையில் வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. சமயப்பிரசாரத்திற்குத் தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகி, தமிழை கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கிபி 1577 இல் கொச்சியில் இயேசு மதப் பிரசாரகர் ஜோன்ஸ் கான்ஸ்வெல்ஸ் என்பவர் தமிழ் அச்சுகளை உண்டாக்கினார். கிபி 1679 இல் தமிழ் போர்ச்சுகீஸ் அகராதி ஒன்று அச்சிடப்பெற்றது. பல தமிழ்-போர்ச்சுகீஸ் அகராதி அச்சிடப் பெறாமலே இந்திய அரசர்களால் அழிக்கப் பெற்றன.


கிபி 1712 இல் வீரமா முனிவர் எனப்படும் பாதர் பெஸ்கி தமிழ்மீது கொண்ட ஆர்வர்த்தினால், பழைய நிகண்டு முறையைக் கைவிட்டு, அகராதி முறையில் சொற்பொருள் காணும் முன்னோடியாகத் திகழ்ந்து "சதுரகராதி" என்ற அகராதியை தொகுத்து வெளியிட்டார். முதன் முதலாக 'அகராதி' என்ற பெயரில் வந்த நூல் இதுவேயாகும்.


சதுரகராதி வெளிவந்த 47 ஆண்டுகளுக்குப் பிறகு செருமன் லூதரன் சமயப் பிரசாரகரான ஜோன் பெப்ரிஷியஸ் என்பவர், தாம் பெற்ற கடனைத் தீர்க்க முடியாது சிறைப் பட்டிருந்தபோது 'தமிழ் ஆங்கில அகராதி' என்பதைச் சிறையிலேயே தொகுத்து ஆங்கிலேயேக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உரிமையாக்கினார். இந்த அகராதி சமயப் பிரசாரகர்களுக்கு உதவியதால் அவர் சிறையை விட்டு வீடு திரும்பினார்!. 1834-1841இல் J.P.ராட்லெர் முயற்சியால் ஓர் அகராதி நான்கு பாகங்களாக வெளிவந்தது.


திரு C.W.கதிரைவேல் பிள்ளை அகராதி சமஸ்கிருதச் சொற்களுடன் மிகப் பெரிய அளவில் 63900 சொற்களைக் கொண்டு 1842ல் வெளி வந்தது.


மேற்கூறிய அகராதி முறையில் காலந்தோறும் ஏற்பட்ட வந்துள்ள வளர்ச்சியும் மாற்றமும் நிகழ்ந்து வந்தது. 1912 இல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு 1935 இல் முடிவு பெற்ற, சென்னை பல்கலைக் கழகத் தமிழ் அகராதி தற்போது பலராலும் பெரிய அளவில் பயன் படுத்த பெற்று வருகிறது.


இத்தகைய அகராதி வளர்ச்சியில் அமரர் எஸ். இராஜம் வரலாற்று முறையில் அகராதி தயாரிக்க அனைத்து நூல்களையும் சந்தி பிரித்து கையெழுத்துப் பிரதி செய்து வைத்துக்கொண்டு பின்னர் அவற்றைப் பதிபிக்கவும் வேண்டும் என்பதற்காக வரலாற்று முறைத் தமிழிலக்கியப் பேரகராதித் திட்டம்(Tamil Dictionary/Glossary on Historicial principles project) என்பதை ஏற்படுத்தினார்.


அனைத்து நூல்களுக்கும் சொல் அகராதி செய்யப்பெற்று பாட பேதங்கள் இருப்பின் இன்றியமையா இடங்களில் மட்டும் அவை எடுத்துக் கொள்ளப்பட்டன. பல வகை சொல்லியல் அகராதிகளைப் பார்வையிட்டு அவற்றில் காணப்படும் பலவித அமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் அடை மொழிகளுடன் சேர்ந்து சொல் தனியாகவும், அடை மொழியில்லாமல் மூலச் சொல் மட்டும் தனியாகவும் தொகுக்கப் பெற்றுள்ளன. 131 நூல்களுக்கும் ஒவ்வொரு தனி நூலுக்கும் சொல்லடைவு செய்து பின்னர் ஒவ்வொரு சொல்லும் எந்தெந்தநூல்களில் எத்தனை முறை வந்துள்ளது என்று பெருந்திரட்டுச் சொல்லடைவு தயாரிக்கப்பட்டது. இம்முறைக்கு தனித் தனியே அட்டைகள் (Cards) எழுதப் பெற்றது.


பல தமிழ் பேரறஞர்களின் கடின உழைப்பால் இன்று இது சாத்தியமாகியிருக்கிறது.
திரு மர்ரே ராஜம், எஸ் வையாபுரி பிள்ளை, மு.சண்முகம் பிள்ளை, வி.மு.சுப்பிரமணிய ஐயர், பி.ஸ்ரீ.ஆச்சாரியா, பெ.நா.அப்புசாமி, கி.வா.ஜகந்நாதன், தெ.பொ.மீனாட்சி சுந்திரம் பிள்ளை, திரு அ.ச.ஞான சம்பந்தன், பு.ரா.புருஷோத்தம நாயுடு, ந.கந்தசாமிப் பிள்ளை, மே.வீ.வேணுகோலப் பிள்ளை, கம்பர், அடிப்பொடி, சா.கணேசன். (இவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை).இவர்களுக்கு என்றென்றும் தமிழ் சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.


 

Friday, August 12, 2005

நீங்கள் எத்தனை புத்திசாலி

இந்த வாரம் கற்றதும் பெற்றதும்'ல்....


நீங்கள் எத்தனை புத்திசாலி’ என்று சி.சபரிநாதன் முப்பது விநோத வாக்கியங்களை எக்ஸெல்லில் மின்னஞ்சலில் கொடுத்து, விடை கேட்டிருந்தார். அதாவது, Roads என்பதை இடம் வலம் மேல் கீழாக எழுதியிருப்பதை CrossRoads என்று கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். பத்துப் பதினைந்து கண்டுபிடிக்க முடிந்தது. இம்மாதிரி தமிழிலும் செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. பன்னிரண்டு கொடுத்திருக்கிறேன். பத்தை நீங்கள் கண்டுபிடித்தாலே, என்னளவு புத்திசாலி!


அடுத்த இதழில் விடைகள் வருவதற்குள் எழுதிப் போட்டால், ‘குளுக்கள்' முறையில் பரிசு. பத்தாவது கொஞ்சம் கஷ்டம். மற்றவற்றை சுலபத்தில் கண்டுபிடித்து விடலாம்.


 [%popup(20050822-vikatan_puzzle.jpg|290|400|விகடன் புதிர்)%] பார்க்க இங்கே கிள்க் செய்யவும்நன்றி ஆனந்த விகடன்

 [ Update on 30th Aug 2005 ]


விடைகள்:


விகடன் 21.8.05 இதழில் கொடுக்கப்பட்ட புத்திசாலித்தன பரீட்சைக் கேள்விகளுக்கான விடை இதோ...


1. நெருப்பு கமல் - அக்னி நட்சத்திரம் -


2. காசில்லை ஹிஹி - ஏழையின் சிரிப்பு


3. சமுதாயம் - சமுதாய முன்னேற்றம் ("வளரும் சமுதாயம்" என்றும் சிலர் எழுதியுள்ளார்கள்.)


4. விகடன் விகடன் - விகடன், ஜூனியர் விகடன்


         


5. ச ந் தி - நாற்சந்தி


         தி


6. டி - கொடியேற்றம்


  கொ


7. நாடு - மேல்நாடு (கேள்வியில் "நாடு" க்குக் கீழே ஒரு கோடு விட்டுப் போய்விட்டது. எனவே, சிலர் "தனி நாடு" என்று விடை எழுதியிருந்தார்கள்.)


          ஊர்


8. ஊர் ஊர் - ஊர்வலம்


          ஊர்


9. மாணிக்கஆர்எம்கேவி -  செங்கல்பட்டு


10. சி - சிகரம்


11. ர்பா - திரும்பிப் பார்


12. ஆயி1ரம்  - ஆயிரத்தில் ஒருவன் (ஆயிரத்தில் ஒன்று என்றாலும் சரி!)


உங்கள் விடைகளுடன் இதை ஒப்பிட்டு, எட்டாவது சரியாக இருந்தால், முதுகில் சுயமாகவோ நண்பர், நண்பிமார் மூலமாகவோ ஒரு ஷொட்டு!


 Old comments from my previous Blog


3. வளரும் சமுதாயம்
5. நாற்சந்தி
11. திரும்பிப்பார்


மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம், ஹி, ஹி.


அன்புடன்,
டோண்டு ராகவன்


By dondu(#4800161), at Fri Aug 12, 05:20:12 PM IST  


4. junior vikatan


By Anonymous, at Fri Aug 12, 05:27:41 PM IST  


7. thani nadu


By Anonymous, at Fri Aug 12, 05:28:56 PM IST  


12. orayiram


By Anonymous, at Fri Aug 12, 05:31:01 PM IST  


4.ஜூனியர் விகடன்
6.தலைகீழான கொடி
9.மாணிக்கப்பட்டு
12.ஆயிரத்தில் ஒருவன்
டோண்டு அய்யா சொன்னதை வழி மொழிகிறேன்.


By சுதர்சன் கோபால், at Fri Aug 12, 05:34:17 PM IST  


1. அக்னி நட்சத்திரம்
2. ஏழையின் சிரிப்பு
4.சுட்டி விகடன்
10. பட்சி


By Anonymous, at Fri Aug 12, 06:13:45 PM IST  


1. senthaamarai??


By Anonymous, at Fri Aug 12, 07:30:19 PM IST  


8. ஊர்கோலம்.


அன்புடன்,
டோண்டு ராகவன்


By dondu(#4800161), at Fri Aug 12, 07:30:57 PM IST  


8 ஊரைச் சுத்தி


By துளசி கோபால், at Sat Aug 13, 09:49:30 AM IST  


3. சமுதாய முன்னேற்றம்
5. சந்திப்பு


By Prabhu Venkatramani, at Sat Aug 13, 05:41:23 PM IST  


8. நாங்கூர்.


By Anonymous, at Sat Aug 13, 06:47:47 PM IST  


6. கொடி ஏற்றம்


By suresh selva, at Sat Aug 13, 07:58:43 PM IST  


Desikan,
Kindly tell me how to post in Tamil - A friend wants to know..
Thanx.


By cosmicblob, at Mon Aug 15, 09:13:46 PM IST  


1. kamalin munn neruppu
2.karuppu kaasillai
3.virivadainda samudayam
6. uyarnda kodi
7. valamana naadu
9. 125 rmkv
10. idu enna logicna, in 'ara'si la 'si'kku munnadi oru 'ara' irukku, aana idula 1/2, 1/4 eduvuney illa, so idu muulu si


By Kavitha, at Tue Aug 16, 10:14:16 AM IST  


i think of
1. senthaamarai
2. yelaiyin sirippil
3. valarum samuthaayam
4. junior vikatan
5.naarchandhi
6. kodi yetram
7. thani naadu
8. ooru naalupattaa...
9. maanikka pattu
10. thangachchi / thanichchi
11. thirumbippaar
12. 1000-il onru


By Parthi, at Tue Aug 16, 11:10:20 AM IST  


10. may be Paradesi...


By Parthi, at Tue Aug 16, 11:13:13 AM IST  


1. அக்னி நக்ஷத்திரம்
2. ஏழையின் சிரிப்பு
3. சமுதாய வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம, சமுதாய ஏற்றத்தழ்வு
4. ஜூனியர் விகடன்
5. நாச்சந்தி
6. கொடியேற்றம்
7. தனிநாடு
8. நாலூரு, நாலூருக்கு
9. மாணிக்கப்பட்டு
10. பட்சி, பஜ்ஜி, ஓசி, தனிச்சி
11. திரும்பிப்பார்
12. ஆயிரத்தில் ஒன்று


By TJ, at Tue Aug 16, 02:57:20 PM IST  


1. kamalin munn neruppu
2.karuppu kaasillai
3.virivadainda samudayam
4. vikadanin parimanangal
5.sadikku idayil sandhi
6. uyarnda kodi
7. valamana naadu
8. thisaiku oru oor
9. 125 rmkv
10. kadaisi
11.thirumpi paar
12. aayirathil oruvan


By Kavitha, at Thu Aug 18, 04:19:14 PM IST  


pasi vandha patthum parandhu pogum


inga 10vathil iruppathal "c" vittutu
"pa" parandhu pocho?


By Anonymous, at Fri Aug 19, 12:57:22 AM IST  


 

Monday, August 1, 2005

www.desikan.com

என் வீட்டுப்பக்கத்தையும், வலைப்பதிவையும் www.desikan.com என்ற வலைத்தலத்தில் இணைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். உங்கள் வசவுகளும் வாழ்த்துகளும் வரவேற்க்கப்படும். இந்த வேலையினால் அவ்வப்போது தான் பதிவுகள் இடம் பெரும். அதுவரை கீழே உள்ள புதிருக்கு(கூகிளை நாடாமல்) விடை காண முயலுங்கள்.. (பின்னூட்டத்தில் (அ) ஈ-மெயிலில் தெரியப்படுத்தவும்)


[%popup(20050822-excel_puzzle.jpg|397|400|புதிர்)%] பார்க்க இங்கே கிளிக் செய்யவும் முதல் புதிருக்கு விடை:
1. Seven Seas


பிகு:
இதே போல் தமிழில் யாராவது உருவாக்கினால் எனக்கு தெரியப்படுத்தவும்.Old comments from my previous Blog


. Downtown
7. He's by himself
8. See-thru blouse
9. First Aid
11. six feet under ground
13. tricycle
14. reading thru lines
15. cross roads
16. under graduation
17. Just between you and me
22. Life after forty
23. Jack in the box
24. growing economy
25. just in the corner
29. standing ovation


By முகமூடி, at Mon Aug 01, 12:28:11 PM IST  


3. forgive , forget
12. glance back
27. Apple pie


By icarus, at Mon Aug 01, 12:42:54 PM IST  


28. Making up lost time


By முகமூடி, at Mon Aug 01, 12:49:08 PM IST  


முகமூடி,


14. reading thru lines
16. under graduation
22. Life after forty
25. just in the corner


கொஞ்சம் தப்பாக உள்ளது!.


By Desikan, at Mon Aug 01, 12:52:18 PM IST  


2. level crossing
4. A to Z
10. west indies
14. reading in between the lines
18. just between you and me


By Jsri, at Mon Aug 01, 01:06:10 PM IST  


அப்போ,


14. reading between the lines
16. under graduates ?
22. life after 40 ?
25. just around the corner
28. making up for lost time


By முகமூடி, at Mon Aug 01, 01:10:17 PM IST  


1 - seven seas
4 - missing U
8 -C through Blouse
6 -Lucky Break
10 - West indies
28 -making up for the lost time
16 - 3 degrees below 0
18 Just between you and me
14 reading between the lines
17 neon lights


By வீ. எம், at Mon Aug 01, 01:10:42 PM IST  


JSri,
2. level crossing - தப்பு
4. A to Z - தப்பு


By Desikan, at Mon Aug 01, 02:02:17 PM IST  


முகமூடி,


16. under graduates - தப்பு
22. life after 40 - தப்பு


By Desikan, at Mon Aug 01, 02:03:31 PM IST  


22. LIFE at 40 OR LIFE beyond 40 ?


By enRenRum-anbudan.BALA, at Mon Aug 01, 02:34:33 PM IST  


பாலா,
22. LIFE at 40 OR LIFE beyond 40 ? - தப்பு.


By Desikan, at Mon Aug 01, 02:38:44 PM IST  


19. ONE IN MILLION, right :)


By enRenRum-anbudan.BALA, at Mon Aug 01, 02:39:11 PM IST  


பாலா,
19. ONE IN MILLION, right :) - சரி


By Desikan, at Mon Aug 01, 02:42:30 PM IST  


22. Life at 41 ????


By enRenRum-anbudan.BALA, at Mon Aug 01, 02:42:39 PM IST  


பாலா,
22. Life at 41 ???? - தப்பு.


By Desikan, at Mon Aug 01, 02:45:22 PM IST  


2. split level
20.Broken promise
21.You fell out of touch?
22.There is life after forty?
26.Just by the corner


By BR, at Mon Aug 01, 02:52:35 PM IST  


22.Life starts/begins at 40?


By BR, at Mon Aug 01, 02:55:54 PM IST  


16 Subzero degree
20 Broken Promise
21 Touch down
23 Centre Jack
30 I Understand, You undertake, To undermine, My undertaking


By contivity, at Mon Aug 01, 02:56:59 PM IST  


20. Broken promise !!!
22. Life starts after 40 !!!


By enRenRum-anbudan.BALA, at Mon Aug 01, 02:58:52 PM IST  


br,
26.Just by the corner - தப்பு.


contivity,
16 Subzero degree - தப்பு
21 Touch down - தப்பு
23 Centre Jack - தப்பு


பாலா,
22 - Life begins at 40.


By Desikan, at Mon Aug 01, 03:02:44 PM IST  


26. Just around the corner! right?


By BR, at Mon Aug 01, 03:11:12 PM IST  


br,
26. Just around the corner!- சரி!


By Desikan, at Mon Aug 01, 03:16:33 PM IST  


21. DON'T touch ???
25. romba kashtam :-(((


Bye !!!


By enRenRum-anbudan.BALA, at Mon Aug 01, 03:22:30 PM IST  


25 அபீட்டு ???


By contivity, at Mon Aug 01, 03:25:29 PM IST  


1. Seven Seas
2. Split Level
3. Forgive and Forget
4. Without You
5. Down Town
6. Lucky Break
7. He's by himself
8. Cut Blouse
9. Arrow on AIDS
10. West Ford
11. Six Feet Underground
12. Backward Glance
13. Tri Cycle
14. Reading Between Lines
15. Cross Roads
16. Three Degrees Below Zero
17. Neon Lights
18. Just Between You and Me
19. One in Million
20. Break The Promise
21. Touch Down
22. Life after Forty
23. Jack in the Box
24. Growing Economy
25. Up before Eight
26. Just in the Corner
27. Apple Pie
28. Making up for Lost Time
29. Standing Ovation
30. I understand You undertake to undermine my undertaking


By Simulation, at Mon Aug 01, 08:48:37 PM IST  


கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.
தேசிகன்


விடைகள்:
1 seven seas
2 split level
3 forgive and forget
4 missing you
5 downtown
6 lucky break
7 he's by himself
8 see through blouse
9 first aid
10 west indies
11 six feet underground
12 backward glance
13 tricycle
14 reading between the lines
15 crossroads
16 three degrees below zero
17 neon lights
18 just between you and me
19 one in a million
20 broken promise
21 you are out of touch
22 life begins at 40
23 Jack in a box
24 growing economy
25 up before 8
26 just around the corner
27 apple pie
28 making up for lost time
29 standing ovation
30 I understand you undertake to undermine my undertaking


By Desikan, at Tue Aug 02, 02:16:41 PM IST  


ஏன் யுனிகேட்டில் உங்கள் வீட்டு பக்கம் etc. உருவாக்கவில்லை!!! ஆகையால் நான் உங்கள் www.desikan.com புறக்களிப்பதாய் உள்ளேன்!!!


By NONO, at Tue Aug 02, 03:59:47 PM IST  


nono,


என் புதிய வீட்டுப்பக்கம், மற்றும் வலைப்பதிவு முழுக்க முழுக்க Unicodeல் இயங்கும். அதனால் www.desikan.com yes-yes தானே ?


By Desikan, at Tue Aug 02, 04:05:46 PM IST  


!என் புதிய வீட்டுப்பக்கம், மற்றும் வலைப்பதிவு முழுக்க முழுக்க Unicodeல் இயங்கும். அதனால் www.desikan.com yes-yes தானே ? "


தற்போது இயங்கிறமாதிரி தெரியவில்லையே...!!! எப்பிடியோ கூடிய சீக்கிரம் அமையுங்கள்!!! அப்போது www.desikan.com yes-yesதான் ;-)!!!


By NONO, at Wed Aug 03, 04:51:59 AM IST  


Desikann,
inspired by ur blog, i've posted few tamil versions in my blog, pls let me know ur comments :)


By Kavitha, at Fri Aug 05, 06:56:31 PM IST  


Did you know that blogging can be a disease if taken in excess? Addicted to blogging? Need help?
Never fear - the BLOGDOCTOR is here. The first step is to admit your addition.
Visit BLOGOHOLICS ANONYMOUS and take the quiz.


By BLOGDOCTOR, at Sun Aug 07, 03:15:36 AM IST  


Your blogger site is very fine. I wish to know about the eof font used in this page. It refers to a different URL?


By NVS, at Wed Aug 10, 12:39:53 AM IST