ஸ்ரீ ஸ்ரீமதே ராமானுஜாய நம: இரண்டாம் பதிப்பு - பதம் பிரித்த பிரபந்தம் தகவல் ( 7.4.2022) பங்குனி உத்திரம்(18.3.2022) அன்று இரண்டாம் பதிப்பு குறித்த அறிவிப்பைப் பார்த்திருப்பீர்கள் ( பார்க்காதவர்கள் இங்கே படித்துக்கொள்ளலாம் ). அதுகுறித்து மேலும் சில தகவல்கள். 1. பலர் ஒரே புத்தகமாக இல்லாமல் இரண்டு புத்தகமாக இருந்தால் வசதியான இருக்கும் என்று விரும்பினார்கள். அதனால் இரண்டாம் பதிப்பு இரண்டு புத்தகங்களாக வரவிருக்கிறது. அநுபந்தத்துடன் சேர்ந்து மொத்தம் மூன்று புத்தகங்கள். 2. திவ்யப் பிரபந்தம் பிழை திருத்தம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அப்பணி இவ்வாரம் முடிவடையும். 3. அநுபதம் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. முடிக்க இன்னும் சில வாரங்கள் ஆகும். 4. காகிதத்தின் விலை போன வருடத்தை விட அதிகமாகியுள்ளது அதனால் புத்தகத்தின் விலை சற்று அதிகமாகும். 5. முன்பதிவுக்குப் பலர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்கள். அவர்களுக்குப் பதில் அனுப்பவில்லை. புத்தகத்தின் உற்பத்திச் செலவு தெரிந்தவுடன் விலையுடன் பதில் அனுப்பப்படும். புத்தகம் முன் பதிவு செய்ய rd...