இரண்டு திருநட்சத்திரங்கள், இரண்டு பெண்கள் - ஓர் நெறி டிசம்பர் 1 திருநெல்வேலியிலிருந்து சீர்காழிக்கு புறப்பட்டேன். மறுநாள் கார்த்திகையில் கார்த்திகை நாள் ! டிசம்பர் 2 அதிகாலை இரண்டரை மணிக்கு சீர்காழியில் இறங்கிய போது ஸ்டேஷனில் யாரும் இல்லை. எங்கும் பலத்த மழை. நாய் ஒன்று அதன் பக்கத்தில் போர்த்திக்கொண்டு இன்னொருவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து ஒருவர் அங்கே வர அவரிடம் திருநகரிக்கு போக வேண்டும் எங்காவது ஆட்டோ இருந்தா அனுப்புங்க என்றேன். பத்து நிமிஷத்தில் முதியவர் பாதி நனைந்திருந்தர் “நீங்க தான் ஆட்டோ கேட்டதா ?” என்றார் “ஆமாம்… திருநகரிக்கு போகவேண்டும்” மழை மேலும் அடித்தது. அட்டோவை முழுவதும் மூடி இருட்டாக்கினார். உள்ளே பீடி வாசனை அடித்தது. வயல், இருட்டு, மழை ஆட்டோ வெளிச்சத்தில் என்னைப் பத்திரமாக திருநகரிக்கு அழைத்துச் சென்றார். “என் நம்பர் எழுதிக்கோங்க இரவு ஆட்டோ யாரும் வரமாட்டாங்க, என்னை கூப்பிடுங்க நானே வரேன்” என்றார். காலை 3.30 மணிக்கு அட்டோ சத்தம் கேட்டு ஸ்ரீ எம்பார் ராமானுஜம் அவர்கள் கதவை திறந்து ”வாங்கோ வாங்கோ..!” என்று அழைத்தது “வீறுடைய கார்த்...