Skip to main content

Posts

Showing posts from November, 2014

வணக்கம் சென்னை - 4

சென்னையில் பண்பலை வரிசையில் பாப்புலர், பிந்து அப்பளம் எல்லாம் நமத்துப் போகும் அளவுக்கு தீவாவளி சமயம் மழை அடித்தது. தீவாவளி முடிந்து பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிய போது செண்டரல் ஸ்டேஷனில் ஓர் இடத்தில் நீர்வீழ்ச்சி போல ஜலம் கொட்டிக்கொண்டிருந்தது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் நியூஸ்பேப்பரை கீழே விரித்துத் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். வெளியே ”ஆட்டோ வேண்டுமா?” என்று கேட்ட அந்த குங்குமப் பொட்டுக்காரரிடம் “தி.நகர்” என்று சொன்னவுடன் பதில் பேசாமல், எனக்கு பின் வந்தவரிடம் ஆட்டோ வேணுமா? என்று கேட்கப் போய்விட்டார். அடுத்து வந்தவர் ”800 ஆகும் சார் தி.நகர் முழுக்க ஒரே தண்ணி" என்றார் சென்னையில் இந்த சாதாரண மழைக்கே ராஜ்பவன் செல்லும் சாலை ’ஐ’ படத்தில் விக்ரம் மூஞ்சி போல ஆகிவிட்டது. மற்ற இடங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாரத்துக்கு முன் அதிகாலை தி.நகர் நாயர் சாலையில் சைகிள் ஓட்டிக்கொண்டு போன போது, போலீஸ் என்னை தடுத்தார்கள். பயத்தில் வேர்த்துவிட்டது என்ன விஷயம் என்று கேட்டதற்கு அங்கே 8x8 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்ட இடத்தை காண்பித்தார். நல்ல வேளை யாருக்கும் ஒன்ற...

ஆழ்வார்கள் விஜயம்

ஒன்றாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு ஆழ்வார்கள் அறிமுகமானார்கள். அந்த வயதில், திருப்பாவை முதல் இரண்டு பாடலும், கடைசி இரண்டு பாடலும் மனனம். அப்பாவுடன் சைக்கிளின் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் போது, திருப்பாவை, ஆழ்வார்களின் திருநட்சத்திரம், அவர்களுடைய அவதார ஸ்தலம், அவர்களைப் பற்றிய கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டே வருவார். கல்லூரி நாள்களிலும் தொடர்ந்து ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ள அழகு, பக்தி பற்றிய பேச்சு, அப்பாவுடன் அவதார ஸ்தல விஜயம் என ஆழ்வார்கள் கூடவே வந்தார்கள். ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை (இருபது வருடம் இருக்கும்) வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தில் எல்லா ஆழ்வார்களையும் வரிசையாகப் பார்த்த போது அதுபோலவே வீட்டிலும் சின்னதாக மாடல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அதே மாதிரி மாடல் செய்ய-- கூகிள் இல்லாத காலத்தில்-- ஆழ்வார்கள் அவதார ஸ்தலத்தில் உள்ள உற்சவர் படங்களை சேகரிக்கத் தொடங்கினேன். பதினாறு வருடங்கள் முன்பிருந்தே ஆழ்வார்களின் அவதார ஸ்தலத்தில் உள்ளது போலவே சின்னதாக யார் செய்து கொடுப்பார்கள் என்று தேடத் தொடங்கினேன். ஆழ்வார்கள் கோஷ்டி பல இடங்கள...