இன்று காலை எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டு இருந்த போது நண்பர் ஒருவர் ஜெயமோகன் எழுதியிருக்கும் ' உள்ளே இருப்பவர்கள் ' என்ற பதிவை எனக்கு அனுப்பியிருந்தார். படித்தேன். ஒரு முறை சுஜாதாவை அவர் இல்லத்தில் சந்தித்த போது விஷ்ணுபுரம் பற்றி பேச்சு வந்தது. (புத்தகத்தை ஜெயமோகனுக்கு திரும்பி அனுப்பிய சமயம் என்று நினைக்கிறேன்). அவரேதான் ஆரம்பித்தார். ஆனால் அவர் சொன்ன விஷயமும் ஜெயமோகன் குறிப்பிடும் சில விஷயங்களும் மிகுந்த முரண்பாடாக உள்ளன. அதைப் பற்றி நான் இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. சுஜாதா என்ன சொன்னார் என்றும் நான் சொல்லப்போவதில்லை. ஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு முறை ஸ்ரீராமானுஜர் குருவுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். குருவின் தலையில் இதமாக தேய்த்துக்கொண்டு இருந்த சமயம், குரு யாதவப் பிரகாசர் சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்ற வாக்கியத்துக்குப் பொருள் சொல்லலானார். கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்ற...