சுஜாதாவின் தம்பி திரு.எஸ்.ராஜகோபால் சுஜாதா பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறார். சென்னையில் சென்ற டிசம்பர் 6-ஆம் தேதி, ராகேஷ் (32) என்னும் மாணவரை வர்கீஸ் (26) என்னும் மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, "கடவுள்தான் என்னைக் கொலை செய்யச் சொன்னார்; ஏன் என்று கடவுளிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று போலீஸிடம் கூறினார் (தினமலர் 7-12-2011) நாம் எல்லோரும் இப்படிச் சொல்பவரை மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லுவிடுவோம். ஆனால் அடிப்படைக் கேள்வியான, 'நாம் செய்யும் காரியங்களுக்கு நாமே பொறுப்பா அல்லது எல்லோரையும் இயக்கும் கடவுள் பொறுப்பா?' என்னும் தத்துவ ஞானக் கேள்விக்கு விடை காண்பதில் சிக்கல் உள்ளது. என் அண்ணன் ரங்கராஜனும் (சுஜாதா) நானும் ஆறு வருடங்களுக்கு முன் பிரம்ம சூத்திரங்களை எளிமையான தமிழில் மொழிபெயர்க்கும்போது இதுபற்றித் தீவிரமாக சிந்தித்தோம்; படித்தோம். பிரம்ம சூத்திரம் (2.1.34) 'பாரபட்சமும் கருணையின்மையும் பிரம்மத்திற்கு இல்லை, நம் முதல் முயற்சியை எதிர்பார்த்து இருப்பதால்' என்று கூறும்- 'வைஷம்யே நைர்குண்யே ந, ஸா பேக்ஷத்வாத் ததா ஹி தர்சயதி' எ...