பள்ளிக்கூடத்திற்கு வெளியே முன்பு மாதிரி இப்போது தின்பண்டங்கள் எதுவும் விற்பதில்லை. ஹைஜீன் என்று நம் புராக்டர் அண்ட் கேம்பில் குழந்தைகளுக்கு வெளியே எதையும் வாங்கித் தர பயப்படுகிறோம். நான் படிக்கும்காலத்தில் ஸாண்ட்விச், பீட்சா, பர்கர் வகையறாக்களைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆறாம் கிளாஸ் படிக்கும்போது ‘பாக்கெட் மணி’ 25பைசாவுக்கு, இரண்டு தேன் மிட்டாய்; கூட மூன்று ஜவ்வு மிட்டாய் கிடைக்கும். தேன் மிட்டாயில் தேன் இருக்காது. ஆரஞ்ச் கலரில் (மைதா மாவு என்று நினைக்கிறேன்.) உருண்டை; உள்ளே உடைத்தால் சக்கரைப் பாகு இரண்டு சொட்டு இருக்கும்; அது தான் தேன். அந்த டேஸ்ட் அடையார் ஆனந்த பவன், கிரண்ட் ஸ்நாக்ஸ் என்பதெல்லாம் தேடினாலும் கிடைக்காது. அதை விற்கும் பாட்டியை என்னால் மறக்க முடியாது.