தமிழ் ஸ்டுடியோ, கூடு இதழில் எழுதுவதற்கு நீங்க பெரிசா ஒன்றும் செய்ய வேண்டாம், சும்மா உங்க வீட்டை சுற்றி ஒரு ரவுண்ட் போய் செடி கொடிகளை படம் எடுத்தால் போதும் என்று சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கமெண்ட் அடித்தார். அதனால் இந்த வாரம் ஒரு மாறுதலுக்கு வீட்டை சுற்றாமல் கும்பகோணத்தை சுற்றி வந்தேன். அங்கே வில்வ மரம் ஒன்றை பார்த்தேன். வில்வ மரம் இருந்த இடம் சக்கரபாணி திருக்கோயிலில். பொதுவாக வில்வமரம் சிவன் கோயிலில் தான் இருக்கும். சின்ன வயதில் எங்கள் பாட்டி வீட்டு பக்கம் இருக்கும் சிவன் கோயிலில் பெரிய வில்வ மரத்தை பார்த்திருக்கிறேன். பிறகு சென்னையில் திருமதி ராதா விஸ்வநாதன் ( எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மியின் மகள்) வீட்டில் என் மனைவி பாட்டு கற்றுக்கொள்ளும் போது திரு விஸ்வநாதனுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டு இருந்த போது அவர் வீட்டில் இருந்த வில்வமரத்திலிருந்து ஒரு பழுத்த வில்வப் பழம் கீழே விழுந்தது. உடனே அவர் அதை எடுத்து என்னிடம் கொடுத்து ஜூஸ் செய்து சாப்பிடு நன்றாக இருக்கும் என்றார். சரி என்று அதை வாங்கிக்கொண்டேன். எப்படி ஜூஸ் செய்வது, நல்லா இருக்குமா ? எவ்வளவு சக்கரை போடணும...