Skip to main content

Posts

Showing posts from May, 2007

பார்பர் ஷாப்பில் வேதாளம்

மொட்டை தலையுடன் வேதாளம் வந்தது. "என்ன திருப்பதியா ?" என்றான் விக்கிரமாத்தித்தன். "அதை ஏன் கேட்கற, நேத்திக்கு 'ஹெட் போனில் கேட்கவும்' னு ஒரு ஈ-மெயில் வந்தது.  சரி என்ன பெரிசா இருக்க போகிறது என்று...கேட்டேன்,  இப்படி ஆயிடுத்து" "என்ன!?" என்றான் விக்கிராமாதித்தன். வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு ஹெட் போனை மாட்டிவிட்டு, கண்ணை மூடிக்கோ" என்றது. விக்கிரமாதித்தன் கேட்க ஆரம்பித்தான் புன்னைகையுடன்.. . நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு ஹெட் போனில் கேட்டு பாருங்கள். மேலே உள்ள சுட்டி வேலை செய்யவில்லை என்றால் கீழே உள்ள சுட்டியில் கேட்கவும். இங்கே முயன்று பாருங்கள் இந்த மாதிரி ஒலிப்பதிவுக்கு  Binaural Recording  என்று பெயர். டம்மி தலையை வைத்துக்கொண்டு ஒலிப்பதிவை செய்கிறார்கள். மேல் விவரங்கள் மேலே உள்ள சுட்டியில் இருக்கிறது. முதல் முறை கேட்பவர்களுக்கு நிச்சயம் இது புது அனுபவமாக இருக்கும்.

சீட்டு மாளிகை – நைலான் கயிறு

சுஜாதாவின் முதல் தொடர்கதை நைலான் கயிறு. குமுதம் 1968, ஆகஸ்ட் மாதம் 141ம் பக்கத்தில் வெளிவந்தது. இதற்கு சுஜாதா வைத்த பெயர் - சீட்டு மாளிகை. ரா.கி.ரங்கராஜன் அதில் முதல் அத்தியாயத்திலிருந்து 'நைலான் கயிறு' என்பதைத் தேர்ந்தெடுத்தார். ( நைலான் கயிறு தொடர்கதையின் கடைசி அத்தியாயம் - சீட்டு மாளிகை). 14 வாரம் தொடர்கதையாக வந்தது. Uவாய் வளைந்து, **** என்று பூப்போட்ட சட்டை, ________ இந்த கோட்டின் அகலத்துக்கு மீசை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் சுநந்தாவின் டைரி என்று பல புதுமைகள் முதல் அத்தியாயத்திலேயே அடங்கும். "யாருப்பா இது?" என்று தமிழ் வாசகர்களை சட்டென்று நிமிர்த்திப் பேசவைத்தது. இரண்டு தலைமுறையினரைப் பாதித்து, இன்றும் நைலான் கயிறு பற்றி அவரைப் பார்ப்பவர்கள் கேட்பதற்கு இது தான் காரணம்.   தமிழ் நடையில் ஒரு புது முயற்சி இந்தத் தொடர்கதையில் துவங்கியது என்று சொல்லாலாம். ( இந்த தொடர்கதை கன்னடத்திலும், மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது, ஒரு படக்கதையாக கூட மாற்றப்பட்டது, திரைப்படமாக்கப்படுவதிலிருந்து தப்பித்தது.) இந்தக் கதையை சுஜாதா அவர்கள் எழுதும் போது நான் பிறக்கவில்லை. நான் காலேஜ் ப...