Skip to main content

Posts

Showing posts from July, 2005

அந்நியன்

வேதாளத்திற்கு மூடவுட் + தலைவலி. "என்ன ஆச்சு நேத்திக்கு ரொம்ப நேரம் மரத்தில தொங்கினியா ?" என்று விக்கிரமாதித்தன் பேச்சு கொடுத்தான். "அந்நியன் நைட் ஷோ படம் பார்த்துட்டு வரும் போதே மணி இரண்டு, அப்புறம் எப்படி மரத்திலே தொங்குவது" என்று வேதாளம் அலுத்துக்கொண்டது. "அதற்கு என்ன படம் நல்லாதானே இருந்தது" அமிர்தாஞ்சன் பாட்டிலை தேடியவாரே "ஏன் சொல்லமாட்டே, உங்க ஆள் படமாச்சே" என்றது வேதாளம். "படத்தில விக்கிரம் ஆக்டிங் எவ்வளவு சூப்பராக இருந்தது, அதுவும் மூணு வேஷத்தில என்னாமா நடிச்சிரிக்கார்" என்றான் விக்கிரமாதித்தன். "விக்கிரம் நல்லாதான் செய்திருக்கார், என்ன தன் பங்க் தலையை முடிந்து குடுமி போட்டுக்கொண்டு வாயை இழுத்து இழுத்து பேசினால் ரூல்ஸ் ராமானுஜம் என்ற அம்பி, செம்பட்டை டை அடித்துக்கொண்டு நுனிநாக்கு ஆங்கிலம்(c'mon nandy ...let's go yo-yo) பேசினால் ரெமோ, சனல் கயிறு போல் தலை மயிரை முகத்தின் (அல்லது காமிரா லென்ஸ் முன்) முன்னாடி போட்டுக்கொண்டு கண்ணை உருட்டினால் அந்நியன். இது ஆக்டிங் இல்லை மேக்கப். ஆக்டிங் என்றால் கடைசியில் அம்பியாகவும், அந்...