எச்சரிக்கை: இதை படிக்க உங்களுக்கு நிறையப் பொறுமை வேண்டும். நடுநடுவே ஏகப்பட்ட தொந்தரவு நேரலாம். எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு "கீச்கீச்" சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அட நிஜமாதான் சார்! நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வாருங்கள். முதல் மாடி, நம்பர் 2C மகாலக்ஷ்மி தெரு, தி.நகர். போன மாசம் தான் கல்யாணம் ஆனது. புது வீட்டுக்குப் போய் இரண்டு வாரம் தான் ஆகிறது. வீட்டிற்கு வாருங்கள், அப்பதான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும். இன்னும் நம்பவில்லையா? என் கஷ்டத்தை எப்படி உங்களுக்குப் புரிய வைப்பேன்? சரி, இதை எழுத ஆரம்பித்ததிலிருந்து எனக்குக் கேட்கும் அந்தக் "கீச்கீச்" சத்தத்தையும் சேர்த்தே எழுதுகிறேன். அப்போதான் என் கஷ்டம் உங்களுக்குப் புரியும். "கீச்கீச்" என்ன சத்தம் கேட்டதா ? சத்தம் அலர்ஜி என்றால் தொடர்ந்து படிப்பது உங்களுக்கு நல்லதில்லை. பிறகு உங்கள் இஷ்டம். "கீச்கீச்" முதலில் அந்த "கீச்கீச்" சத்தம் ஜன்னலிருந்து வருகிறது என்று நினைத்து எல்லா ஜன்னலுக்கும் எண்ணெய் போட்டேன். "கீச...