Skip to main content

Posts

Showing posts from September, 2015

ரத்த நிலா

உலகெங்கும் அந்த செய்தி பல மொழிகளில் பரவியிருந்தது. மின்சாரம் இல்லாத கிராமம், பிரதமர் செல்லாத நாடு என்று எங்கும் இதே பேச்சு. நடிகைகள் அடிக்கடி குந்தலை வருடுவது போல பலர் மொபைலை வருடி அந்த செய்தியை வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அனுப்பினார்கள். முகநூலில் திகட்ட திகட்ட மீம்ஸ் ஜோக் போட்டு உலகத்தில் ஜீவிப்பதை இளைஞர்கள் உறுதிசெய்தார்கள். டிவியில் விவாதித்தார்கள். புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடுக்கு முன் “வதந்திகளை நம்பாதீர்கள்” திரையரங்குகளில் முந்திக்கொண்டது. எதற்காக ஃப்ரொஃபைல் படம் மாற்றுகிறோம் என்று  யோசிக்காமல் எல்லோரும் மாற்றினர். ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலம் அல்லாமல் அப்பக்குடத்தான், அன்பிலிலும் கூட்டம் வழிந்தது. வேளாங்கனி, நாகூர் தர்கா என்று எதையும் விட்டு வைக்கவில்லை. யார் முதலில் இந்த செய்தியை பரப்பினார்கள் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது....

ஸ்ரீரங்கத்து ராமானுஜதாசர்கள்

இன்று மாலை(செப்-23, 2015) முனைவர் ஸ்ரீ.உ.வே இரா.அரங்கராஜன் ஸ்வாமிகளை சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் அவருடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சாஸ்தரா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ திவ்ய பிரந்தம் திருவாய்மொழி பாடத்துக்கு இவர் தான் விரிவுரையாளர். ’நம்பிள்ளை உரைத்திரன்’ ஆய்விற்காக இவருக்கு காமராசர் பல்கலைக்கழகம் (1981) முனைவர் பட்டம் வழங்கியது. ஸ்ரீவைஷ்ணவ நூல்களை முறைப்படி பெரியோர்பால் பயின்றவர். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ.உ.வே.அண்ணங்கராசார்யார் ஸ்வாமியால் ”கலை இலங்கு மொழியாளர்” என்ற பாராட்டுப் பெற்றவர். பல ஸ்ரீவைஷ்ணவ நூல்களை பதிப்பித்துள்ளார். ஸ்ரீராமானுஜர் பற்றி பல விஷயங்கள் பேசினோம். தற்போது அவர் “ஸ்ரீரங்கத்து ராமானுஜதாசர்கள் ஒரு தொகுப்பு” என்று நமக்கு அதிகம் தெரியாத ஸ்ரீராமானுஜ தாசர்கள் பலருடைய வாழ்கை வரலாற்றை எழுதியுள்ளார். அதன் கையெழுத்து பிரதியை என்னிடம் ஆசையாக காண்பித்தார். முத்து முத்தாக கை எழுத்து. அச்சு அடிக்க வேண்டாம், அப்படியே நகலெடுத்தால் போதும் என்றேன். அழகான தமிழில் கிட்டதட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தாசர்களை பற்றி ஆய்வு செய்து, எழுதியுள்ளார். புத்தகம் இன்னும் நான்கு

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையுடன் ஒரு நாள்

பெரிவாச்சான் பிள்ளை - சேங்னூர் காலை 6 மணிக்கு கும்பகோணம் வந்த போது சீமாட்டியுடன் சிட்டி யூனியன் வங்கியும் வரவேற்றது. பித்தளை பாய்லர் குளித்துவிட்டு விபூதி பட்டை அடித்துக்கொண்டு தூங்கி வழிந்துக்கொண்டு இருந்தவர்களுக்கு டீ கொடுத்துக்கொண்டிருந்தது. மினி பஸ்ஸில் ஏறிய போது அதில் ’சகலமும் கிருஷ்ணார்ப்பணம்’ என்று உணர்ந்தேன்; பஞ்சு மிட்டாய் பாக்கெட், கீரைக்கட்டு, முருங்கை, பூ கூடை... தலைக்கு மேல் உள்ள கைபிடியில் லுங்கி, பனியன் உலர்ந்துக்கொண்டு. இதன் மத்தியில் எனக்கு உட்கார இடமும் கிடைத்தது பெரிய பாக்கியம். கும்பகோணத்திலிருந்து சேங்கனூர் சுமார் 15 கிமி தூரத்தில் இருக்கிறது. அந்த பேருந்தில் "ஊர தெரிஞ்சுக்கிட்டேன்" பாடலை காலை 6.30 மணிக்கு எதிர்பார்க்கவில்லை. பாடல் முடிந்தவுடன் டிரைவர் ஸ்டியரிங்கை விட்டுவிட்டு ரிமோட்டை தேடி திரும்பவும் அதே "ஊர தெரிஞ்கிட்டேன்" மறு ஒலிபரப்பு செய்தார், கொஞ்சம் அதிக சத்தத்துடன். இரண்டாவது முறை பாடல் முடிந்தவுடன் சேங்கனூர் வந்துவிட்டது. இரண்டு காத தூரம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இரண்டு காது வலிக்கும் தூரம். மெயின் ரோடிலிருந்து ஒரு மைல