Skip to main content

Posts

Showing posts from June, 2018

சர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்

நேற்று ( 24.6.2018) ” National Seminar on Contribution of Sri Vedanta Desika to Mathematics, Science & Technology " என்ற கருத்தரங்கில் பார்வையாளராக கலந்துகொண்டேன். இராமாயணத்தில் புஷ்பக விமானம் டைப் கருத்தரங்காக இருக்குமோ என்று நினைத்துக் கிளம்பினேன். ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கு “கவிதார்க்கிக சிம்மம்”,  ”சர்வ தந்திர சுதந்திரர்”, “வேதாந்தாசார்” என்ற பல விருதுப் பெயர்கள் உண்டு. பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற்று எனக்கு முன்னோர் ஈட்டிவைத்த பொருள் இல்லை, சொந்த வருவாயும் இல்லை, எனினும் மூதாதையர் காட்டிய வரதராஜர் என்ற அருளாளப் பெருஞ்செல்வம் இருக்கிறது என்று கடைசி வரை மிகுந்த வைராக்கியத்துடன் ஸ்ரீவைஷ்ணவத்துக்கு பல பொக்கிஷங்களை அள்ளித் தந்துள்ளார் (அவர் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பிறகு ஒரு தனி கட்டுரையாக எழுதுகிறேன் ) ஆங்கிலத்தில் matrix, vector, graph theory, encryption, cryptography, compression போன்ற வார்த்தைகள் எல்லாம் கடந்த ஓர் (அல்லது இரண்டு)  நூற்றாண்டு வார்த்தைகள். தமிழ் இலக்கியத்தில் பா, பாவகை முதலான யாப்பு போன்ற உத்திகள் பல காலப் போக்கில் தோன்றியது. ஆங்கிலத்தில்